கரூர் | அமைச்சரை அவதூறாக பேசிய அதிமுக கவுன்சிலர் – மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளியேற்றம்

கரூர்: அமைச்சரை அவதூறாக பேசிய அதிமுக கவுன்சிலர் கரூர் மாநகராட்சி மாமாமன்ற கூட்டத்தில் இருந்து பாதுகாவலர் மூலம் வெளியேற்றப்பட்டார். பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் மற்றொரு அதிமுக கவுன்சிலர் பங்கேற்றார். கரூர் மாநகராட்சி அவசரக்கூட்டம் மேயர் கவிதா தலைமையில் கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் இன்று (ஜன. 31 தேதி) நடைபெற்றது. ஆணையர் ந.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் 1வது வார்டு உறுப்பினர் சரவணன் (திமுக) மாநகராட்சி பகுதியில் சாலைகள் மிகமோசமாக இருக்கிறது என்றவர், … Read more

தமிழ்நாடு தகவல் ஆணையம் சீரமைக்கப்பட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

தமிழ்நாடு தகவல் ஆணையம் முற்றிலுமாக சீரமைக்கப் பட வேண்டும் என்று, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையரும், 6 தகவல் ஆணையர்களில் நால்வரும் ஓய்வு பெற்று விட்டதால், ஆணையம் கிட்டத்தட்ட செயலிழந்து விட்டது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி … Read more

கொலை முயற்சி வழக்கில் குற்றசாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் உட்பட 5 பேர் வழக்கில் இருந்து விடுவிப்பு: தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் குற்றசாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேர் வழக்கில் இருந்து விடுவித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழக்கில் இருந்து விடுவித்துள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டில் திமுக நகர செயலாளர் சுரேஷ் மீது கொலை முயற்சிததாக வழக்கு தொடர்ந்துள்ளனர். குற்றசாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேர் வழக்கில் இருந்து விடுவித்துள்ளனர். திருச்செந்தூரில் கடந்த 2011-ம் … Read more

"ஏகனாபுரம் பகுதியில் பத்திரப்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதா?" ஆர்.டி.ஐ-ல் வெளிவந்த தகவல்!

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டம் அமையவிருக்கும் ஏகனாபுரம் பகுதியில் எவ்வித பத்திரப்பதிவும் நிறுத்தப்படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏகானாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி கேட்டிருக்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.  சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையமானது 4,750 ஏக்கர் பரப்பளவில் காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் பகுதியில் அமையவிருப்பதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவித்திருந்தன. இந்த திட்டத்தில் பாதிப்படைவோம் எனக்கூறி ஏகனாபுரம், மேலேறி, நாகப்பட்டு, நெல்வாய், குணகரம்பாக்கம் உட்பட 13 கிராமத்தை சேர்ந்த மக்கள் பல்வேறு வகையில் … Read more

‘ஆளுனர் நிறைய விஷயங்களை கேட்டார்; ஆதாரம் திரட்டிக் கொண்டு மீண்டும் சந்திப்பேன்’: ராஜ் பவன் வாசலில் சவுக்கு சங்கர் பேட்டி

‘ஆளுனர் நிறைய விஷயங்களை கேட்டார்; ஆதாரம் திரட்டிக் கொண்டு மீண்டும் சந்திப்பேன்’: ராஜ் பவன் வாசலில் சவுக்கு சங்கர் பேட்டி Source link

யாரும் இல்லாத நேரத்தில் 10 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர்.. தட்டித்தூக்கிய போலீசார்.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதிக்கு அருகில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 22 வயது அஜித் என்ற மகன் இருக்கிறார். அஜித் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமிக்கு அஜித் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமிக்கு பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். … Read more

மழை நீர் வடிகாலை சேதப்படுத்திய புதிய திருமண மண்டபத்திற்கு ரூ.64 ஆயிரம் அபராதம்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிதாக கட்டப்பட்ட கால்வாயை உடைத்து அனுமதியின்றி மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்திய தனியார் திருமண மண்டப உரிமையாளரிடம் 64 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. அங்குள்ள பாரதிதாசன் வீதியில் 8 இன்ச் பிளாஸ்டிக் பைப் செல்லும் அளவிற்கு பள்ளம் தோண்டிய தனியார் திருமண மண்டப நிர்வாகத்தினர், புதிய மழைநீர் வடிகாலை சேதப்படுத்தி மண்டபத்தின் கழிவுநீரை வெளியேற்றினர். இதனையடுத்து, திறந்த 2 நாட்களில் அந்த மண்டபத்தை இழுத்து பூட்டி சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள் … Read more

குட்கா வழக்கில் கைதானவருக்கு ஜாமீன்: அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.1 லட்சம் வழங்க நிபந்தனை

மதுரை: குட்கா வழக்கில் கைதானவருக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிவகங்கையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலையை பதுக்கல் தொடர்பாக அம்ரேஷ் என்பவரை போலீஸார் 19.12.2022-ல் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3.90 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் அம்ரேஷ் மனு தாக்கல் செய்தார். … Read more

''நீ பேனா வையி, நான் வந்து உடைப்பேன்"… உ.பிக்களை நேருக்கு நேர் வெளுத்த சீமான்

சென்னை மெரினாவில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் எழுத்துகளை குறிக்கும் வகையில் கடலுக்குள் பேனா வடிவ தூண் எழுப்ப திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 81 கோடி செலவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்ததில் இருந்தே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மேலும் இதனால், கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படும், மக்கள் வரிப்பணத்தில் ஏற்கனவே மெரினாவை சுடுகாடாக்கி நினைவிடங்களை கட்டிவிட்டீர்கள், மீனவ மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற விஷயங்களை முன்வைத்து சீமான் எதிர்ப்பை … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக விருப்பம்; புது டிவிஸ்ட்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடனே திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்காக திமுக மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஈரோடு கிழக்கு தொகுதியில் வார்டு வாரியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக இதுவரை அந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து … Read more