அரக்கோணம் கீழவீதியில் திரெளபதி அம்மன் கோயில் விழாவில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

அரக்கோணம்: அரக்கோணம் கீழவீதியில் திரெளபதி அம்மன் கோயில் விழாவில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கிரேன் விபத்தில் காயமடைந்த 85 வயது சின்னசாமி திருவள்ளூர் மருத்துவனமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கீழவீதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவில் கிரேன்முலம் மாலை அணிவிக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. அம்மனுக்கு மாலை அணிவிக்க முயன்றபோது கிரேன் கவிழந்து பூபாலன், முத்து, ஜோதிபாபு ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.   ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே … Read more

போலீசாருக்கு போக்கு காட்டிய வடமாநில கும்பல் கைது: மாடுகளை திருடியது ஏன்? -அதிர்ச்சி தகவல்

மதுரையில் ஜல்லிக்கட்டு காளை மற்றும் பசுக்களை வாகனங்களில் கடத்திச் சென்ற வடமாநில கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரையில் கடந்த மாதம் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் பசு மாடுகளை மினி லாரிகளில் கடத்திச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது இந்நிலையில், அதனை தடுப்பதற்காக மாநகர் எல்லை பகுதிகளில் வாகன சோதனையை காவல் துறையினர் தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவு கூடல்புதூர் சோதனை சாவடியில் மாடுகளை கடத்தி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்துவதற்காக … Read more

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை… விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்…!!

தமிழ்நாட்டில் சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அதனை முதல்வர் மு.க ஸ்டாலின் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசியதாவது “தமிழ்நாடு ஆளுநர் தற்பொழுது தனது நிலைபாட்டை மாற்றியுள்ளார். குறிப்பாக டெல்லி சென்று வந்ததிலிருந்து மாநில அரசுக்கு எதிரான போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக இருக்கிறார்.  கூடிய விரைவில் தமிழக ஆளுநர் மாற்றப்படலாம். அதிமுகவில் நிலவும் உட்கட்சி … Read more

இன்று மதியம் வரை மட்டுமே மூலவர் தரிசனம்!!

பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மூலவரை இன்று மதியம் வரை மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா வரும் 27ஆம் தேதி காலை 8 மணி முதல் 9 மணி வரை மலைக்கோயிலில் நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவையொட்டி மலைக் கோயிலில் யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சன்னதி திரையிடப்பட உள்ளது. அதனால் இன்று … Read more

பைக்கை விலைக்கு வாங்க வந்த இளைஞர் ஓட்டிப் பார்ப்பதாக கூறி பைக்குடன் மாயம்

புதுச்சேரி சேதராப்பட்டில் தனியார் நிறுவன ஊழியரிடம் பைக்கை  விலைக்கு வாங்க வந்ததாக கூறி, இளைஞர் ஒருவர் அதை நைசாக எடுத்துக் கொண்டு மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், அச்சரம்பட்டு பகுதியில் தங்கியிருந்து புதுச்சேரியில் வேலை செய்து வருகிறார்.  பைக்கை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் அவர் விளம்பரம் செய்தார். அந்த பைக்கை வாங்க வந்திருப்பதாக கூறி ரமேஷ் என்பவர்  ராஜேசை சந்தித்தார். பின்னர்  பைக்கை ஓட்டி பார்த்துவிட்டு … Read more

குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள கிராமசபையில் விவாதிக்க வேண்டியது என்ன? – தமிழக அரசு விரிவான வழிகாட்டுதல் வெளியீடு

சென்னை: குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவை குறித்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும், வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் விவாதிக்கப்பட வேண்டிய கருத்துகள் குறித்த அறிவுறுத்தல்களை ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் வெளியிட்டுள்ளார். அதன்படி, கிராம ஊராட்சியில் கடந்த ஆண்டு ஏப்.1 முதல் டிச.31 வரை பொது நிதியில் இருந்து மேற்கொண்ட செலவு அறிக்கை, கடந்த ஆண்டுக்கான தணிக்கை அறிக்கைக்கு ஒப்புதல் … Read more

பிப்ரவரி 3ல் அதிரும் அதிமுக… பதிலுக்கு இறங்கி அடிக்க ரெடியான பன்னீர் டீம்!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்போது? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டன. அதன்பிறகு ஏன் இவ்வளவு தாமதம்? சீக்கிரமா முடிச்சு விட்டிருங்க. அதிமுக யார் கையில் என்பதை அக்கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி சாமானியர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்ற பேச்சு எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்த தீர்ப்பு வருவதற்குள் நடக்கும் அரசியல் அதிரடிகளுக்கு பஞ்சமிருக்காது. அதிமுக பொதுக்குழு வழக்கில் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி பாதியில் தீர்ப்பு வரக்கூடும் என இருவிதமான … Read more

செங்கல்பட்டு அருகே ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். வெங்கடாபுரம் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் குடிநீர் பிடிக்க மகன் பிரதிஷுடன் மணிகண்டன் என்பவர் சென்றுள்ளார். கழிவுநீர் தொட்டியை மூடாமல் அலட்சியமாக இருந்ததால் உயிரிழந்தாக சிறுவனின் கும்பத்தினர் குற்றசாட்டு வைத்துள்ளனர்.