மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! பள்ளிகளுக்கு ஜனவரி 18-ம் தேதி விடுமுறை அறிவிப்பு..!!

அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான நேற்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இன்று (ஜன. 16) மாட்டுப் பொங்கல் ,17-ம் தேதி காணும் பொங்கல். … Read more

நள்ளிரவில் ரூ.50,000 மதிப்பிலான 160 குடிநீர் குழாய்களைத் திருடி சென்ற திருடன் கைது …!

விழுப்புரம் மாவட்டம் தேவனூரில் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் போடப்பட்ட குடிநீர் குழாய்களை திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். அண்மையில் அங்கு ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான 160 குடிநீர் குழாய்கள் திருடுபோயின. சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தபோது, நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், ஒவ்வொரு வீடாக சென்று குழாயை திருடியது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து பல்வேறு திருட்டு வழக்குகளில் தேடப்பட்டுவந்த அன்பரசன் என்பவனை கைதுசெய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவனது … Read more

கடலூர் மாவட்டத்தில் வயலிலேயே விற்றுத் தீர்ந்த பன்னீர் கரும்புகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர்: பன்னீர் கரும்புகள் வயலிலேயே விற்று தீர்ந்ததால் கடலூர் விவசா யிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 700 ஏக்கர் அளவில் பன்னீர் கரும்புகளை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். இந்த ஆண்டு இப்பகுதிகளில் 742 ஏக்கர் பன்னீர் கரும்பு பயிரிட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனாவால் பன்னீர் கரும்புகள் விலை போகவில்லை. விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தாண்டு பன்னீர் கரும்பு … Read more

சென்னையில் காணும் பொங்கல் விழா! பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் காணும் பொங்கல் நாள் அன்று, பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பில், “ஜனவரி 17 அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக மெரினா கடற்கரையை ஒட்டி உள்ள காமராஜர் சாலையில் பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. * காமராஜர் சாலையில் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாகும் … Read more

பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கிய பதைபதைக்கும் வீடியோ வெளியானது..!!

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக எழுந்த தொழில்நுட்ப கோளாறுகளால் பயணிகள் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது என்றும், அங்கு நிலவிய காலநிலையும் விமான விபத்துக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் பலியானவர்களில் 5 இந்தியர்கள் உட்பட … Read more

மதுரை பாலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு: சிறந்த காளைக்கு கார், வீரர்களுக்கு பைக்குகள், தங்க காசு பரிசுகள்

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. இதில் சிறந்த காளைக்கு கார், வீரர்களுக்கு மோட்டார் சைக்கிள், தங்கக் காசு உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக் கட்டு நடக்கிறது. நாளை (ஜன.16) மாட்டுப்பொங்கல் நாளில் மதுரை அருகே பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி கமிட்டி நிர்வாகிகள் செய்து வரு கின்றனர். கமிட்டி தலைவர் மலைச்சாமி, … Read more

மருத்துவர்கள் சொன்ன தகவலால் ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கருங்கல்மேடு பகுதியில் வசித்து வருபவர் ஈஸ்வரமூர்த்தி. இவரது மனைவி ரத்தினாள் என்கின்ற ரஞ்சிதம் (26). இருவருக்கும் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் இனியன் என்ற மகன் உள்ளான். இனியனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் ரத்தினாள் மிகவும் மனவேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற ரஞ்சிதம் வீடு திரும்பவில்லை. இதனால் தனது … Read more

பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்யாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை

சென்னை: கடைகள், நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளர் நலத்துறை செயலர் முகமது நசிமுத்தின், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி, இணை ஆணையர் வே.விமலநாதன் அறிவுறுத்தல் பேரில், சென்னையில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வாடிக்கையாளர் சேவையில் இல்லாத நேரத்தில் பணியிடத்துக்கு அருகில் … Read more

இலங்கைக்கு எதிராக அபார சதம் அடித்த கோலி; புலி வேட்டையுடன் ஒப்பிட்டு ட்விட்டரில் வாழ்த்து மழை

இலங்கைக்கு எதிராக அபார சதம் அடித்த கோலி; புலி வேட்டையுடன் ஒப்பிட்டு ட்விட்டரில் வாழ்த்து மழை Source link