கடத்தல் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் எஃப்ஐஆர் பதிவு செய்ய எஸ்.பி. அனுமதி தேவையில்லை: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
சென்னை: கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக சில மாவட்டங்களில் போலீஸார் சம்பந்தப்பட்ட எஸ்.பி.க்களின் உத்தரவுக்காகக் காத்திருப்பதாகவும், இதனால் பிரச்சினை பெரிதாகி, சட்டம்-ஒழுங்கில் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய எஸ்.பி.க்களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டாம். அது தேவையும் இல்லை. … Read more