பவானி டூ மேட்டூர்… மாஸ் பயணத்திற்கு ரெடியாகும் நெடுஞ்சாலை… வேற லெவல் ஈரோடு!

கொங்கு மண்டலத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய நகரம் ஈரோடு. இங்கிருந்து அக்ரஹாரம், ஆர்.என்.புதூர், லட்சுமி நகர், பவானி, அம்மாபேட்டை, மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் செல்ல ’மேட்டூர் மெயின் ரோடு’ பிரதான சாலையாக அமையும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த வழித்தடத்தில் தினசரி நூற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக மாறியுள்ளது. இந்த சாலை வழியாக தான் ஈரோடு முதல் பெங்களூரு வரை செல்ல … Read more

ஊராட்சி மன்ற தலைவர் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை

தமிழகத்தில் கடந்த ஆண்டு 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சியில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு  வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தார். அவர் மாடம்பாக்கம் அருகே ஆதனூர் பகுதியில் நண்பர் சத்யா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு திடீரென வந்த மர்ம கும்பல், வெங்கடேசன் மீது மூன்று … Read more

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மனோகரன் என்பவர் உயிரிழந்துள்ளார். மலைப்பகுதியில் வேட்டையாடி விளையாடிய போது தவறுதலாக நாட்டு துப்பாக்கி வெடித்து விபரீதம் ஏற்பட்டுள்ளது என்று தகவல் அளித்துள்ளனர். 

”மாசம் ஒருமுறைதான் டார்கெட்; திருடிய நகையை வெச்சு..” – யார் இந்த சென்னையின் ராபின் ஹுட்?

திருட்டு சம்பவங்கள் பல ரகங்களில் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் சென்னையில் சாலை ஓரத்தில் வசித்து வந்த நபர் ஒருவர் மாதம் ஒரு முறை வீடுகளில் புகுந்து திருடி இல்லாதவர்களுக்கு உதவி செய்வதை பல ஆண்டுகளாக செய்து வந்திருக்கிறார். அர்ஜுன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1993ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் படத்தால் ஈர்க்கப்பட்டிருப்பார் போல இருக்கிறது. அந்த படத்தில், கதாநாயகனான அர்ஜுன் பணக்காரர்களின் செல்வங்களை கொள்ளையடித்து ஏழை எளிய மக்களுக்கு உதவுவார். இதே பாணியைதான் சென்னையின் ராபின் ஹுட்டாக இருந்த … Read more

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை.!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.  இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக … Read more

35 ஆயிரம் பேருக்கு வேலை: இந்தியன் ரயில்வே அறிவிப்பு..!

இந்தியன் ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ஸ்டேஷன் மாஸ்டர்கள், கூட்ஸ் கார்டுகள், கமர்ஷியல் பிரிவு ஊழியர்கள், டிக்கெட் கிளார்க், சீனியர் கிளார்க் உள்ளிட்ட தொழில்நுட்பம் சாராத பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை ரயில்வே தேர்வு வாரியம் நடத்தி உள்ளது. மொத்தம் 35,281 பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணபித்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள இந்த பணியிடங்களுக்கு பல கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளின் முடிவு, நியமனம் தொடர்பான அட்டவணையை ரயில்வே வாரியம் நேற்று வெளியிட்டது. இது குறித்து … Read more

அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் காயம்..!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் காயம் அடைந்தனர். மஞ்சவாடியில் இருந்து அரூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில்  காளிப்பேட்டை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட திரளான பயணிகள் பயணம் செய்தனர். சேலம் -அரூர் நெடுஞ்சாலையில்  தண்ணீர்தொட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது சேலத்தில் இருந்து அரூர் நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து, அரசு பேருந்தின் பின்பகுதியில் பயங்கரமாக … Read more

மதுரை ரயில்வே கோட்டத்தில் நீண்ட தூர ரயிலில் ‘புத்தகங்களுடன் ஒரு பயணம்’ திட்டம் தொடக்கம்

மதுரை: புத்தகங்களை வாசித்தபடி பயணிக்க வசதியாக நீண்ட தூர ரயிலில் ‘புத்தகங்களுடன் ஒரு பயணம்’ என்ற திட்டத்தை மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. ரயில்களில் நீண்ட தூரம் பயணிப்போர், தங்களின் பயணக் களைப்பை போக்கும் விதமாக புத்தகங்களையும் கையோடு எடுத்துச் செல்வது வழக்கம். இவர்களின் வசதிக்காக அனைத்து பெரிய ரயில் நிலையங்களிலும் புத்தக விற்பனை கடைகள் உள்ளன. இந்நிலையில், புத்தகப் பிரியர்களுக்கு மேலும் ஒரு வசதியாக மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் ‘புத்தகங்களுடன் ஒரு பயணம்’ … Read more

மூடப்படாத மழைநீர் கால்வாய்… தவறிவிழுந்த மாடுகள்! அலட்சியத்தால் தொடரும் விபத்துகள்

மதுரவாயில் தாம்பரம் பைபாஸ் சாலையோரம் உள்ள மழை நீர் கால்வாய் முறையாக மூடப்படாமல் இருப்பதால் ஒரு பசு மாடு மற்றும் ஒரு எருமை கன்று தவறி விழுந்துள்ளது. சென்னை மதுரவாயில் தாம்பரம் பைபாஸ் சாலை இருபுறங்களிலும் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகால் முறையாக மூடப்படாததால் இங்கே அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதாக  புகார் எழுந்துள்ளது. குறிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாய் மற்றும் மகள் இந்த சாலை அருகே இருந்த கால்வாயில் சிக்கி உயிரிழந்தனர். சமீபத்தில் … Read more