முத்துப்பேட்டை வட்டாரத்தில் இதுவரை 10,000 கால்நடைகளுக்கு இலம்பி நோய் சிகிச்சை-நோயை கட்டுப்படுத்த மருத்துவர் ஆலோசனை

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாரத்தில் 10ஆயிரம் கால்நடைகளுக்கு இலம்பி நோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.திமுக தலைமையிலான தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாரத்தில் கால்நடை பராமரிப்பு துறைசார்பில் பல்வேறு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் மாடுகளில் பரவி வந்த இலம்பி தோல் நோய் தற்போது தமிழகத்தில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நோய் மாட்டினங்களை தாக்கும் … Read more

மாண்டஸ் புயலால் கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்கள் மூடல் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேற்கு திசை அரபிக்கடலில் இருந்து, கிழக்கு நோக்கிச்சென்ற மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பலத்த காற்றால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. பூங்காக்களில் மரம் விழுந்துள்ளது. சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளது. படகுகள் இயக்கமுடியாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நேற்று இரவு முதலே, மாண்டஸ் புயலில் வெளி வட்டத்திற்கு, மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி பலத்த காற்று, சாரல் மழையுடன் செல்லத் துவங்கியது. அதிகாலையில், காற்றின் வேகம் 50 கிலோ மீட்டரை தாண்டியது. மழையும் தொடர்ந்து பெய்ததால், மலைச்சாலையிலும், நகர்ப்பகுதிகளிலும், பல … Read more

மாதம் ரூ.56,100 சம்பளத்தில் வேலை வேலை வாய்ப்பு.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் பெயர் : தமிழ்நாடு மருத்துவப் பணிகள் பதவியின் பெயர் : உளவியல் உதவிப் பேராசிரியர் உடன்கலந்த மருத்துவ உளவியலாளர் காலி பணியிடங்கள் : 24 வயது வரம்பு : 37- க்குள் சம்பளம் : ரூ.56,100 – ரூ.2,05,700 கல்வித் தகுதி : உளவியலில் (Psychology) M.A/ … Read more

கரையோர மக்களே கவனமா இருங்க.. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு..!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது. மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் புயல், மாமல்லபுரம் அருகே இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், … Read more

மேன்டூஸ் புயல் பாதிப்பு: சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை சேதம்

சென்னை: மேன்டூஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதையை அமைக்கும் பணி நடைபெற்றது. … Read more

புயலை சந்திக்கப் போகும் மகாபலிபுரம்: பொங்கும் கடல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையைக் கடக்க உள்ள நிலையில் மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகி தீவிர புயலாகவும் மாறி சென்னையில் இருந்து சுமார் 270 கிலோமீட்டர் தெற்கு-தென்கிழக்கு மையம் கொண்டுள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுகுறைந்து இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே புயலாக கரையை கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று … Read more

Mandous Cyclone: மாண்டஸ் புயலால் வீட்டை இழந்து தவிக்கும் புதுச்சேரி மக்கள்!

புதுச்சேரி: மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டன. புதுச்சேரி அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட மக்கள் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு புதுச்சேரிக்கும் – ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் … Read more

சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சுமார் 500 வீடுகளை கடல்நீர் சூழ்ந்தது

மயிலாடுதுறை: சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சுமார் 500 வீடுகளை கடல்நீர் சூழ்ந்துள்ளது. கடல் சீற்றத்தால் தாழ்வானபகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

மாண்டஸ் புயல் எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் தேக்கமடைந்த காய்கறிகள்

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்ததால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வரும் வியாபாரிகள் வருவது சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 2000 டன் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் எதிரொலியாக சென்னை உட்பட வட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்தமழை பெய்துவருகிறது. நேற்று நள்ளிரவு முதல் சென்னை மாநகரில் விடிய விடிய மழை கொட்டிதீர்த்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த … Read more

மாண்டஸ் புயல்: எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் திறப்பு

மாண்டஸ் புயல்: எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் திறப்பு Source link