ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை: எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் – நீதிமன்றம்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரியும், ரத்து செய்யக் கோரியும், மும்பையைச் சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பும், ஹெட் டிஜிட்டல் ஒர்க்ஸ், ஜங்லி கஸ், பிளே கேம்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த … Read more

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17/11/2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18/11/2022: தமிழ்நாடு புதுவை மற்றும் … Read more

பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி..!!

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான செகண்ட் ஷோ படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் சுதீஷ் பப்பு. இதையடுத்து பல்வேறு ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து கவனம் ஈர்த்தார்.ஒளிப்பதிவாளர் சுதீஷுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அமிலோய்டோசிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்த நோய் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், ஒளிப்பதிவாளர் சுதீஷ் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 44.ஒளிப்பதிவாளர் சுதீஷ் பப்புவின் மரணம் மலையாள திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது … Read more

அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பயணிகளிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் – போக்குவரத்துத்துறை உத்தரவு

அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்துக் கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடனும் நடந்துக்கொள்ள வேண்டுமென, போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க, அறிவுரைகளை வழங்கி, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச்செல்ல வேண்டுமென்றும், சாலை விதிகளை பின்பற்றி, பேருந்தை கவனமாக இயக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பேருந்து இயக்கத்தினை செம்மைப்படுத்தி வருவாயை அதிகரிக்குமாறும் … Read more

சீர்காழியில் மழையால் பாதித்த பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீர்காழியில் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் மிகக் கனமழை பெய்தது. சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பெய்ததால், சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஏராளமான குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முதல்வர் முக ஸ்டாலின் 14ம் தேதி நேரில் பார்வையிட்டு … Read more

தவறை ஒப்புக்கொண்டு தீர்வை நோக்கி செல்கிறோம்: மா.சுப்பிரமணியன்

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொது மக்களுக்கு கொசு வலைகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதியப்பட்ட பிறகே உடற்கூராய்வு செய்யப்பட்டது. மருத்துவர்களின் முதல் கட்ட அறிக்கையை வைத்து தான் கவனக்குறைவாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்து, சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவின் இறுதி அறிக்கை ஓரிரு நாட்களில் … Read more

கோட்டூர் ரோட்டில் ரூ.1.88 கோடியில் அறிவுசார் மைய கட்டுமான பணி தீவிரம்: விரைந்து முடிக்க நடவடிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் ரூ.1.88 கோடியில் அறிவுசார் மையம் கட்டுமான பணி தீவிரமாக நடக்கிறது. அதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி நகராட்சியில் ஒரு சில இடத்தில் மட்டுமே நூலக செயல்பாடு உள்ளது. இருப்பினும்,  நகராட்சி பகுதியிலேயே நூலகம், பயிற்சி பட்டறையுடன் அடங்கிய ‘அறிவுசார் மையம்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இதற்கான இடம் தேர்வு செய்யும் பணி சுமார் 7 மாதத்திற்கு முன்பு நடைபெற்றது.  இதில், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் … Read more

வாணியம்பாடி: ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கியதாக இருவர் கைது

வாணியம்பாடி அருகே ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்களை தாக்கியதாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் காவல் நிலையத்தில் மதுக்குமார் மற்றும் வினோத்குமார் ஆகிய இரு காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு புத்துக்கோவில் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது புத்துக்கோவில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே சில இளைஞர்கள் மது அருந்திக் கொண்டு அவ்வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு இடையூராக இருந்துள்ளனர். இந்நிலையில் அங்கு ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த … Read more