'கட்சியின் நற்பெயருக்கு களங்கம்'.. சூர்யா சிவா 6 மாத காலம் சஸ்பெண்ட் – அண்ணாமலை அறிக்கை

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, சூரியா சிவாவை பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்குவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். பாரதிய ஜனதா சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா இருவரும் செல்போனில் பேசிக்கொண்டபோது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இருவரும் சரமாரியாக ஆபாச வார்த்தைகளில் பேசினர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே இந்த … Read more

அக்கா தம்பியாக தொடருவோம்… ஆடியோ சண்டைக்கு பிறகு சமாதானம்… சூர்யா – டெய்சி கூட்டாக பேட்டி

அக்கா தம்பியாக தொடருவோம்… ஆடியோ சண்டைக்கு பிறகு சமாதானம்… சூர்யா – டெய்சி கூட்டாக பேட்டி Source link

கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவி மூலம் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர். தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஃபிஃபா கால்பந்து உலககோப்பை போட்டிகளை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 சேனல் மூலமாகவும், ஜியோ சினிமா செயலி மூலமாகவும் காணலாம். இந்த நிலையில் கால்பந்து உலக்கோப்பை … Read more

ஜல்லிக்கட்டு வழக்கு: விலங்குகள் நல அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி – வாதங்களின் முழு விவரம்

புதுடெல்லி: ‘ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் தாக்கல் செய்த புகைப்படங்கள் யதார்த்த நிலைக்கு முரணாக உள்ளது. எனவே அவற்றை ஏற்கக் கூடாது’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்பு மற்றும் விலங்கின ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, விலங்குகள் நல அமைப்பின் (Compassion Unlimited plus … Read more

எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்கு போவது உறுதி… ஆவேசமாக சொன்ன ஆர்எஸ் பாரதி!

தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், போதைப் பொருட்கள் விற்பனை அதிகரி்த்துவிட்டது எனவும் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை, எதிர்க்கட்சி தலைவர் சந்தித்து நேற்று புகார் மனு அளி்து தற்போதைய திமுக ஆட்சியி்ல் தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துவிட்டதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை வி்ற்பனை செய்பவர்களே பாஜகவினர்தான். அவர்களை தட்டிக்கேட்கும் தைரியம் எடப்பாடி பழணிசாமிக்கு உள்ளதா? திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை தங்கு … Read more

களக்காடு மலையடிவாரத்தில் வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பல்: புகைப்படங்கள் வெளியீடு

களக்காடு: களக்காடு மலையடிவாரத்தில் வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பல் குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த கும்பலை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெற்கு வீரவநல்லூர் பீட்டில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வருவாய்துறையினருக்கு சொந்தமான கன்னிப் பொத்தை உள்ளது. இப்பகுதியில் சுற்றி திரியும் வனவிலங்குகளை மர்ம நபர்கள் வேட்டையாடுவதாக களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் களக்காடு துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில், களக்காடு … Read more

இளைஞர்களே ரெடியா.. மதுரையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் மதுரையில் நாளை (நவம்பர் 25 ஆம் தேதி) தனியார் … Read more

பேனர் ஒன்றுக்கு ரூ.7,906 செலவிடப்பட்டதாக புகார்: தமிழக அரசு மறுப்பு

சென்னை: “நம்ம ஊரு சூப்பரு இயக்கம்” செயல்படுத்த விழிப்புணர்வு பதாகைகள் நிறுவியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள புகார்களுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ”ஊரக பகுதிகளில் ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2 வரை ‘நம்ம ஊரு சூப்பரு ” என்ற “சிறப்பு மக்கள் இயக்கம்” அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டத்தின்போது துவங்கப்பட்டது. இந்த இயக்கமானது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை … Read more

ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு – குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு ஹேப்பி நியூஸ்!

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களுக்கு, பொருட்கள் வாங்கியது போல் குறுஞ்செய்தி சென்றால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கூட்டுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 34 ஆயிரத்து 790 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. 246 கிடங்குகளும் பயன்பாட்டில் இருக்கின்றன. நியாய விலைக் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, அரிசி இலவசமாகவும், துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் … Read more

குறைகிறது சுங்கச்சாவடி கட்டணம் – அமைச்சர் எ.வ.வேலு தகவல்

வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி வளாகத்தில் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற பயிற்சி பணிமனை கட்டுமானப் பணிகள் ரூ.3.73 கோடியில் நடைபெற்றுவருகிறது. இதனை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று  ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்க வசதியாக 69 ஐ.டி.ஐ.க்களை மேம்படுத்த ரூ.264.83 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பணிகள் அனைத்தையும் வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளேன். … Read more