டேன் டீ தேயிலை தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைப்பதை வாபஸ் பெறாவிட்டால் தொடர் போராட்டம்: எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை
கோவை: டேன் டீ தேயிலை தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைப்பதை அரசு வாபஸ் பெறும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கும் என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை வால்பாறை அருகே சின்கோனா பகுதியில் உள்ள டேன் டீ அரசு தேயிலை தோட்டம், நீலகிரி கூடலூர், நடுவட்டம், குன்னூர் டேன் டீ தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. … Read more