அரசு விடுதி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: 10 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

சென்னை வடபழனி திருநகர் ஹாஸ்டல் சாலையில், தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, விடுதியில் தங்கி இருந்த 4 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே சக மாணவர்கள், பாதிக்கப்பட்ட 4 மாணவர்களையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விடுதிக்கு சென்று … Read more

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா; ஆளுநர் விரைவில் முடிவு செய்வார்: அமைச்சர் ரகுபதி

சென்னை: ” ஆளுநரிடம் இதுவரை 21 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் எந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று எந்த கால நிர்ணயமும் கிடையாது. எனவே கால நிர்ணயம் செய்யும்படி நாம் கேட்க முடியாது” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை … Read more

உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 5ஆம் தேதிக்கு மேல் சம்பவம் இருக்கு!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதி வாக்கில் தமிழக-புதுவை கடலோரப்பகுதிகளின் அருகில் … Read more

World AIDS Day: தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அரசு சார்பில் எய்ட்ஸ் பேரணி

நாமக்கல்: உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி நாமக்கல்லில் விழிப்புணர்வு கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 500க்கும்‌ மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். பொதுமக்களிடம் எயிட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் -1ம்‌ தேதி உலக எய்ட்ஸ்  தினம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள எயிட்ஸ் நோய் மீதான சமத்துவமின்மையை ஒழித்து நோயை முடிவுக்கு கொண்டு வருவதே என்ற மையக் கருத்தை அடிப்படையாக … Read more

இயற்கை எழில் கொஞ்சும் இடமான மஞ்சளாறு அணை சுற்றுலாத்தலமாக மாற்றப்படுமா?.. சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு

தேவதானப்பட்டி: தமிழகத்தில் மலைகளின் ராணியாக ஊட்டி, இளவரசியாக கொடைக்கானல் திகழ்கிறது. சீசன் நாட்கள் மட்டுமா? இங்கு ஆண்டுதோறும் சுற்றுலாப்பயணிகள் படையெடுத்தபடியே உள்ளனர். அதனைப்போன்றே தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள தேவதானப்பட்டி, வருசநாடு, போடிமெட்டு போன்ற பகுதிகளை மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் அருவிகள், மலைகள், அணைகள், நதிகள், குளங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு … Read more

டீ கடைகளில் 2 குவளை, முடித்திருத்தும் கடைக்குள் மறுப்பு… ஒரத்தநாட்டில் இன்னும் தீண்டாமை?

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கிளாமங்கலம் கிராமத்தில், டீ கடைகளில் இரட்டை குவளை முறையும், முடித்திருத்தும் கடையில் ஆதி திராவிடர் சமூக மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமலும் பல ஆண்டுகளாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கடந்த அக். 2ஆம் தேதி ஒரத்தநாடு தாசில்தாரிடம் இதுகுறித்து புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து கிராம அலுவலர் ஆய்வு செய்து தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்து அறிக்கை அளித்துள்ளார். … Read more

குட்டி மாவட்டமான குமரியில் ஒரு டஜன் மாநில நிர்வாகிகள்: அவ்ளோ பேரையும் தி.மு.க மேடையில் ஏற்ற முடியுமா?

குட்டி மாவட்டமான குமரியில் ஒரு டஜன் மாநில நிர்வாகிகள்: அவ்ளோ பேரையும் தி.மு.க மேடையில் ஏற்ற முடியுமா? Source link

தமிழகத்தில் 5ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் … Read more

வீடியோவை தடை செய்ய ஐகோர்ட் உத்தரவு..!

தனது அறையில் சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொள்ளும் நீதிபதி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்க வேண்டும் என, டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெல்லி கோர்ட் நீதிபதி ஒருவர் தனது அறையில் சக பெண் ஊழியருடன் தவறாக நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த காட்சிகளை தடுக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மனுதாரரின் … Read more

மணக்குள விநாயகர் கோயிலில் யானை லட்சுமி நின்ற இடத்தில் பூக்கள் வைத்து பக்தர்கள் மரியாதை

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோயில் இன்று பூஜைகள் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. யானை லட்சுமி கோயில் முன்பு நின்ற இடத்தில் பக்தர்கள் பூக்கள் வைத்து அன்பை வெளிப்படுத்தினர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி நேற்று உயிர் இழந்தது. உடல் கூறு ஆய்வு இரண்டு மணி நேரம் நடந்தது. அப்போது யானையின் தந்தங்கள் எடுக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதையடுத்து யானை லட்சுமி உடல் குழியில் இறக்கப்பட்டு அதில் 50 மூட்டைகள் உப்பு, விபூதி … Read more