போலீசாருக்கு பறந்த திடீர் உத்தரவு – டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி!

ராகிங் சம்பவம் தொடர்பான புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் மீது திருப்தி அடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கல்வி நிறுவனத்தினர் தரப்பில் ஏதேனும் அலட்சியம் காரணமாக காவல் துறையிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் வேண்டுமென்றே … Read more

ஏகாம்பரநாதர் ஆலய புனரமைப்புப் பணியில் முறைகேடு நடைபெறவில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் புதுப்பிக்கும் பணியில் முறைகேடு செய்ததாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கவிதா மீது தொடரப்பட்ட  வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற  புதுப்பிக்கும் பணிக்காக அரசு 2 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியதாகவும், கோவில் இணைய தளம் வாயிலாக பக்தர்களிடம் இருந்து வசூல் செய்த பணத்தை இந்து சமய அறநிலையத்துறை திருப்பணி திருப்பணிக்காக பயன்படுத்தாமல் முறைகேடு செய்ததாக காஞ்சிபுரம் மாஜிஸ்ட்ரேட்ட நீதிமன்றத்தில் … Read more

குமரியில் 23 இடங்கள் காலி ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்: நாளை கடைசி

நாகர்கோவில்: குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட ஊர்க்காவல் படையில் 20 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப வினியோகம், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று, நாளை (16ம்தேதி) மாலை 5 மணிக்குள், எஸ்.பி. அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். … Read more

கிருஷ்ணகிரி || கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயி.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொடுகனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் ஒரு விவசாயி. இவருக்கு சில காலமாக கடன் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், அவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அந்த கடனை அடைப்பதற்கு, முடிவு செய்துள்ளார். ஆனால், இந்த முடிவை அவரது குடும்பத்தினர் ஏற்கவில்லை. அத்துடன் அவரது குடும்பத்திற்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், சின்னசாமியின் மனைவி தனது தாய்வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால், மனம் நொந்து போன சின்னசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த … Read more

”டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர் காப்பீடு கால வரம்பை நீட்டிக்க வேண்டும்” – வேளாண்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..!

தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்கக்கோரி மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், வடகிழக்கு பருவமழை மற்றும் இதர காரணங்களினால் விவசாயிகள் பொதுசேவை மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை பெற இயலாத நிலை உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலவரம்பினை வரும் 30 வரை நீட்டிக்க வேண்டும் என கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  Source link

கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள், காப்பாற்றச் சென்ற மற்றொருவர் உயிரிழப்பு

கரூர்: கரூர் அருகே கழிவு நீர் தொட்டியில் முட்டு பிரிக்க சென்ற கட்டிடத் தொழிலாளர்கள் 2 பேரும், அவர்களைக் காப்பாற்ற சென்ற மற்றொரு கட்டிடத் தொழிலாளி என 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நட த்தி வருகின்றனர். கரூர் அருகேயுள்ள தோரணக்கல்பட்டி கரட்டுப்பட்டி காந்தி நகரில் வழக்கறிஞர் குணசேகரன் புதிதாக வீடு கட்டி வருகிறார். புதிதாக கழிவு நீர் தொட்டி (செப்டிக் டேங்) கட்டப்பட்டு 2 … Read more

காசி தமிழ் சங்கமம்… தமிழ் ஆர்வலர்களுக்கு வெளியான நற்செய்தி!

காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம், கல்வி, பொருளாதார மற்றும் சமூக தொடர்பை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வசதியாக, பாரதிய பாஷா சமிதி என்ற அமைப்பு வாரணாசியில்,. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நவம்பர் 16 முதல் டிசம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்குகள், விவாத அரங்குகள், கலாசார-பாரம்பரிய நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் காசி தமிழ் சங்கமம் திட்டத்திற்கு, சென்னை ஐஐடி … Read more

கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே முகாமிட்டுள்ள யானைகள்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி, பனகமுட்லு பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடந்த 12 நாட்களாக மூன்று யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் பிக்கனப்பள்ளி, மேலுமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் மூன்று யானைகள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர். வனத்துறையினர் அந்த மூன்று யானைகளையும் சானமாவு வனப்பகுதிக்குள் விரட்ட … Read more

Tamil news today live: காங்கிரஸ் அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகள் இடையே மோதல்; 3 பேருக்கு காயம்

Tamil news today live: காங்கிரஸ் அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகள் இடையே மோதல்; 3 பேருக்கு காயம் Source link

“கோவில் நிலம் மீட்பு நடவடிக்கை: ஒத்துழைக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும்” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்..!

கோவில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு இதனை தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கில் கோவில் சொத்துக்களை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு … Read more