காட்பாடியில் வரும் 29ம் தேதி வரை நடக்கிறது அக்னிபாத் ஆட்சேர்ப்பு முகாமில் திரண்ட 9 மாவட்ட இளைஞர்கள்: சான்றிதழ் இல்லாதவர்கள் ஏமாற்றம்
வேலூர்: காட்பாடியில் உள்ள வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. இதில் 9 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். உரிய சான்றிதழ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று முதல் வரும் 29ம் தேதி வரை ராணுவத்திற்கு அக்னிபாத் ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் அக்னிவீர்(ஆண்), அக்னிவீர்(பெண் ராணுவ காவல் பணி), சிப்பாய் தொழில்நுட்பம் உதவி செவிலியர், உதவி செவிலியர்(கால்நடை) … Read more