கிருஷ்ணகிரி: அரசு பஸ்-மினி லாரி மோதிய விபத்தில் 14 பேர் படுகாயம்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பேருந்தும், மினி லாரியும் மோதிய விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து பயணிகளுடன் விருத்தாச்சலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது இன்று காலை இரண்டு மணி அளவில் பேருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மிட்டப்பள்ளி தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மினி லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து இந்த விபத்தை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து … Read more

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை..!

இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால், கிறிஸ்துமஸ் மறு நாளை (டிசம்பர் 26-ம் தேதி) அரசு விடுமுறையாக அறிவித்து மேற்கு வங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறு நாளை (டிசம்பர் 26-ம் … Read more

தமிழர்கள் நிம்மதியாக வாழ அரசு இயன்றதை செய்யும்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழர்கள் அனைவரும் நிம்மதியுடன் வாழ, திமுக அரசு இயன்ற அனைத்தையும் செய்யும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சியினருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கை நிலையும் உயர, அனைத்து மாவட்டங்களும் சமச்சீரான வளர்ச்சியைப் பெற வேண்டும். இதற்காக மாவட்டந்தோறும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் திராவிட மாடல் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பெரம்பலூர், அரியலூரில் தொழில் பூங்காக்களை உருவாக்கவும், திட்டங்களை … Read more

கடலூர் அருகே கிணற்றில் குதித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

கடலூர்: சிறுப்பாக்கத்தில் உள்ள கிணற்றில் குதித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தாய் கல்யாணி, மகன் அருள் ஹெலன் கிரேஸ் (8), மிஸ்பாசாந்தி தற்கொலை செய்தது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் பெண் தற்கொலை: மர்மம் இருப்பதாக கூறி சடலத்துடன் சாலைமறியல் செய்த உறவினர்கள்!

நாட்றம்பள்ளி அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமம் மணியகார் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஸ்வேதா (22). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததை அடுத்து இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜேஷ் மற்றும் அவரது தாயார் ஸ்வேதாவிடம் தகராறில் ஈடுபட்டதாக … Read more

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி Source link

தமிழகத்தில் இன்றும், நாளையும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்றும், நாளையும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னையில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதன் காரணமாக தாம்பரம், எழும்பூா் பகுதிகளில் இன்று காலை காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. தாம்பரம் பகுதிகள்: ராஜகீழ்பாக்கம் வெங்கடராமன் நகா், முத்தமிழ் நகா், கிருஷ்ணா நகா், மாணிக்கம் நகா், புருசோத்தமன் … Read more

புத்தூர் கட்டு வைத்தியச்சாலையால் ஒரு காலை இழந்து நிற்கும் சென்னை இளைஞர்..!!

சென்னையை சேர்ந்தவர் விஜய். பெயிண்டரான இவருக்கு வேளாங்கன்னி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் பார்க்கில் தனது குழந்தையை விளையாட அழைத்து சென்ற போது, தவறி கீழே விழுந்து விஜயின் வலது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே விஜய் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் கட்டு போட வேண்டும் கூறியுள்ளனர். பின்னர் நண்பரின் மூலமாக வடபழனியில் உள்ள புத்தூர் கட்டு வைத்தியசாலைக்கு சென்ற … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களையும் கைப்பற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் திமுக முனைப்புடன் உள்ளது.இதற்காக, கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகளுடன் மேலும் சில கட்சிகளைச் சேர்க்கவும் திமுக திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்கவும், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தவும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், முதல்வர்மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடக்கிறது.கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் துணை அணிகளின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Source link

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2023- 24 கல்வி ஆண்டில் எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு தடை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2023- 24 கல்வி ஆண்டில் எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் போதிய வசதிகள் இல்லாததாலும் விதிகள் பின்பற்றாததாலும் தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.