மரித்து போகவில்லை மனிதநேயம் மின்கம்பத்தில் இருந்து கீழே விழுந்து எலும்பு முறிந்த குரங்குக்கு சிகிச்சை-கார் மூலம் நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

தா.பேட்டை : தா.பேட்டையில் மின் கம்பத்தில் இருந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட குரங்கிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திமுக பிரமுகர்களின் செயலை பொதுமக்கள் பாராட்டினர்.திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் குரங்கு ஒன்று மின்சாரம் தாக்கியதில் மின் கம்பத்தில் இருந்து கீழே விழுந்தது. இதில் குரங்கு கருங்கல் மீது விழுந்ததில் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டு இடுப்பு எலும்பு முறிந்தது. இதனால் எழுந்து நடக்க முடியாமல் குரங்கு மிகுந்த … Read more

அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் வருகிறதா கேரள எல்லையில் இருக்கும் கண்ணகி கோயில்?

தமிழக கேரள வன எல்லையில் அமைந்துள்ள `மங்கலதேவி கண்ணகி கோயில்’, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. தமிழகத்தின் மேகமலை புலிகள் காப்பகத்தின் வண்ணாத்திப்பாறை மலை மற்றும் கேரளாவின் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தின் மங்கலதேவி ஆகிய இரு மாநில மலைகள் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். தனது கணவன் கோவலனை கள்வன் எனக் கூறி பாண்டிய மன்னன் கொலை செய்ததால் கோபமுற்ற கண்ணகி மதுரையை எரித்த கையோடு கால்நடையாக இந்த மங்கலதேவிக்கு வந்து … Read more

குடிபோதையில் தூக்கில் தொங்கிய சினிமா கலைஞர்.. சென்னையில் பரபரபப்பு.! 

சென்னை அருகே ஓட்டேரி பகுதியில் ஏகாங்கிபுரத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்ற (28 வயது) சினிமா சண்டை கலைஞர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த வருடம் அதே பகுதியை சேர்ந்த ரீனா (28 வயது) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தகைய நிலையில் கடந்த இரு நாட்களாக அரவிந்தன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து ரீனாவிடம் தான் தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். தன்னுடைய மனைவி ரீனாவிடம் தெரிவித்து வந்து இருக்கின்றார். இத்தகைய நிலையில் நேற்று … Read more

வெளியானது சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு: எத்தனை பேர் தேர்ச்சி தெரியுமா..?

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். அதன்படி, நடப்பாண்டு 1,011 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு … Read more

மின் இணைப்பு எண் – ஆதார் இணைப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளை தினத்துக்கு (நவ.8) தள்ளி வைத்துள்ளது. தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் கடந்த அக்டோபர் 6-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து … Read more

பாஜக மட்டுமல்ல.. எந்த கட்சி பின்னாலும் போக வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை – கடம்பூர் ராஜு காட்டம்!

பாஜக தலைமையில் கூட்டணி என்ற வார்த்தை உண்மையான அதிமுக தொண்டர்களிடமிருந்து வராது. பாஜக மட்டுமல்ல எந்தக் கட்சி பின்னால் போக வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜூ தெரிவித்துள்ளார். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், வரும் 9-ம் தேதி பேரூராட்சி, … Read more

தமிழகத்தை மிரட்டும் மேன்டூஸ் புயல்… தயார் நிலையில் NDRF குழு!

தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய பகுதியில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை மேன்டூஸ் புயலாக உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதனையடுத்து 7,  8, 9, 10 ஆகிய தேதிகளில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ராணிப்பேட்டை,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர்,  பெரம்பலூர், … Read more

சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கவில்லை எனக்கூறி செம்பரம்பாக்கத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூர்: சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கவில்லை எனக்கூறி செம்பரம்பாக்கத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விருவாக்கப் பணியில் மழைநீர் கால்வாய் அமைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

ஒன்றரை வயது மகளை வன்கொடுமை செய்த தந்தை… மருத்துவமனை தகவலால் வெளிவந்த உண்மை!

தனது ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது. திருச்சியில் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ் (31) என்பவர், கூலி வேலை செய்து வந்திருக்கிறார். இவர் தினந்தோறும் கஞ்சா மற்றும் மதுபோதையில் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டவரென சொல்லப்படுகிறது.   இவருக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் ஒருநாள் இரவு இவர் தன் குழந்தையின் அருகில் படுத்துள்ளார். சற்று நேரத்தில் … Read more