கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரண வழக்கில் முன்ஜாமின் கேட்டு டாக்டர்கள் மனு தாக்கல்!

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்து ஆட்ட வீராங்கனை பிரியா கடந்த நவம்பர் 7ம் தேதி மூட்டு வலி பிரச்சனை காரணமாக கொளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பிரியா ஆபத்தான நிலையில் கடந்த 8ம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரியா கடந்த 11ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.  மேலும் இந்த … Read more

சக நடிகர்கள் என்னுடன் பேச அஞ்சுகின்றனர் : பிரகாஷ்ராஜ்

மத்திய அரசை விமர்சிப்பவர்களுடன் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், கடந்த காலங்களில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், முற்போக்குவாதி நரேந்திர தபோல்கர் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொடூரத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பினர். நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பா.ஜ.க அரசை விமர்சித்து வருகிறார். அதன் வன்முறை முகத்தை தனது ஒவ்வொரு ட்விட்டர் பதிவிலும் வெளிப்படுத்தி வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக சுயேச்சையாக பிரகாஷ்ராஜ் … Read more

நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் – இந்திய வானிலை மையம்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலில் நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுமேலும் மேற்கு-வடமேற்கு திசையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 3 நாட்களுக்குள் நகரக்கூடும் என்பதால், வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. வரும் … Read more

எம்பிசி இட ஒதுக்கீட்டை புதுவை அரசு உறுதி செய்ய தவறினால் நானே களமிறங்கி போராடுவேன்: ராமதாஸ் எச்சரிக்கை 

சென்னை: “புதுவை மக்களின் உணர்வுகளை அம்மாநில அரசு உணர வேண்டும்; மதிக்க வேண்டும். புதுவையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தான் முழுமையான சமூகநீதி. வாக்களித்த மக்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “புதுவை அரசின் ஏ, பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதி. … Read more

தமிழகத்தில் இனிமே இது இருக்காது… அமைச்சர் சக்கரபாணி உறுதி!

திருவாரூர் தெற்கு வீதியில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு சுய உதவிக்குழு கடன், பயிர்க்கடன் என மொத்தம் 1,262 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். மேலும் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களும், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற … Read more

கெத்தை மலைப்பாதையில் காரை ஆக்ரோஷமாக துரத்தி சென்ற காட்டு யானையால் பீதி: வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்..!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கெத்தை மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக காரை துரத்தி செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் கெத்தை மலைப்பாதையில் முகாமிட்டுள்ள யானை கூட்டம், அவ்வழியாக செல்லும் கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களை வழி மறித்து வருகின்றன. இந்நிலையில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்த காரை வழிமறித்த யானை, ஆக்ரோஷமாக பிலரி கொண்டு காரை துரத்தியது. விரைந்து செயல்பட்ட ஓட்டுநர், காரை பின்னோக்கி இயக்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. … Read more

ஒரு அட்மிஷன்கூட இல்லையாம்… மாணவர் சேர்க்கைக்கு ஏங்கும் பொறியியல் கல்லூரிகள்! ஏன் இப்படி?

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவது குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். தமிழகத்தில் நான்காம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொறியியல் இடங்கள் காலியாக இருப்பதுடன், சில பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூடும் நிரம்பாத நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. நாட்டை கட்டமைப்பு செய்வதில் பொறியாளர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. இந்த பொறியாளர்களை உருவாக்கும் படிப்பாக பொறியியல் கல்வி இருந்து வருகிறது. கடந்த … Read more

Tamil news today live: வீராங்கனை பிரியா மரண வழக்கு.. மருத்துவர்கள் முன்ஜாமின் கோரி மனு தாக்கல்

Tamil news today live: வீராங்கனை பிரியா மரண வழக்கு.. மருத்துவர்கள் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் Source link

முன்னாள் கவுன்சிலர் வீட்டின் மொட்டை மாடியில் சிறுத்தையின் தோல்! தேனியில் மீண்டும் பரபரப்பு!

தேனி மாவட்டம் அருகே வடவீரநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற கவுன்சிலர் துரைபாண்டியன் வீட்டின் மொட்டை மாடியில் சிறுத்தையின் தோல் காய வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வனத்துறை அதிகாரிகள் துரைப்பாண்டியன் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகிவிட்டது தெரிய வந்தது.  இதனைத் தொடர்ந்து அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்த போது அங்கு சிறுத்தையின் தோல் மஞ்சள் பூசி காய … Read more