மதுரை மக்களுக்கு குட் நியூஸ்.. 25ம் தேதி வரை இலவசமாக பார்க்கலாம்..!
உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலை ஒருவார காலம் கட்டணமில்லாமல் பொதுமக்கள் பார்வையிட தொல்லியல்துறை அனுமதி வழங்கியுள்ளது. நவம்பர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மதுரை திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வார காலம் கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (சனிக்கிழமை) முதல் நவம்பர் 25-ம் தேதி வரை கட்டணமில்லாமல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கி தொல்லியல்துறை உத்தரவிட்டுள்ளது. … Read more