பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் நூற்றாண்டு நினைவுச்சின்ன வடிவில் ஆயிரம் ஊழியர்கள் நின்று சாதனை: 15 நிமிடங்களில் அசத்தல்

பரமக்குடி: பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் நூற்றாண்டு நினைவுச்சின்ன வடிவில் ஆயிரம் ஊழியர்கள் 15 நிமிடங்களில் நின்று சாதனை நிகழ்த்தினர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், பொது சுகாதார மாவட்ட நூற்றாண்டு விழா நடைபெற்றது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விழாவை துவக்கி வைத்து நூற்றாண்டு மலரை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, பரமக்குடி பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை … Read more

எம்எல்ஏ ஆக வேண்டும்: ஓபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த 6 வயது சிறுவன்

எம்எல்ஏ ஆக வேண்டும் ஓபிஎஸ்ஸை சந்தித்து விருப்பம் தெரிவித்து 6 வயது சிறுவன் ஆச்சரியப்படுத்தினான். தேனி மாவட்டம் கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் தனது பண்ணை வீட்டிற்கு வருகை தந்தார். அப்போது கட்சியின் நிர்வாகிகளுடன் வந்த ஆறு வயது சிறுவனை நலம் விசாரித்த ஓபிஎஸ், நீ என்ன ஆகப்போற என்று கேட்டார். அதற்கு அந்த ஆறு வயது சிறுவன் எம்எல்ஏ ஆக வேண்டும் எனக் கூறியதை கேட்டு புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்து … Read more

மானியம் வேணும்னா இதைப் பண்ணுங்க… மின்சார கணக்கீடு- ஆதார் இணைப்பது எப்படி?

மானியம் வேணும்னா இதைப் பண்ணுங்க… மின்சார கணக்கீடு- ஆதார் இணைப்பது எப்படி? Source link

"கூகுள் பே மூலம் பணம் அனுப்பு." ஸ்மார்ட் திருடர்களால் பீதியில் கோவை.! இருட்டில் அரங்கேறும் பகீர் சம்பவங்கள்.! 

சமீபகாலமாகவே கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறி கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இது பற்றி, போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் கூட இந்த குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் நீலாம்பூர் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகளை ஒரு கும்பல் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் நபர்களை குறி வைத்து இந்த … Read more

காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள்: மருந்து குடித்து பெற்றோர் தற்கொலை..!

சிதம்பரம் அருகே, நாளை நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலைடில் மகள் காதலனுடன் சென்றதால் வேதனையடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வேலங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(65). இவர், தனது மனைவி சுமதியுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். சேகர் என்பவருக்கு சொந்தமான வயலில் இறந்து கிடந்த இருவரது உடலையும் மீட்ட புதுச்சத்திரம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் … Read more

தமிழகம் முழுவதும் 1080 மையங்களில் நடைபெற்ற குரூப் 1 தேர்வு..!

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற்றது. 18 துணை ஆட்சியர்கள், 26 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 25 வணிகவரித்துறை உதவி ஆணையர்கள் உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான தேர்வு 1080 தேர்வு மையங்களில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 149 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில் அதில், 45,939 பேர் தேர்வு எழுதினர். … Read more

வானிலை முன்னறிவிப்பு: நவ.21, 22 தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும். பின்னர் … Read more

காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும்: சவுக்கு சங்கருக்கு என்ன நிபந்தனை!

நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தனர். இதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை … Read more

தமிழகத்தில் மழை தொடருமா? வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மழை அதிகம் பெய்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு  திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த  … Read more

பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் முறைகேடு: பல்கலைக்கழக துணை பதிவாளர் பணிநீக்கம்

சேலம் : அதிமுக ஆட்சியில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் ராமன் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. உரிய அங்கீகாரம் இல்லாத தொழிநுட்பப் படிப்புகள் நடத்தியது, கல்வித் தகுதி இல்லாத வெளிமாநில மாணவர்களை தொலைதூரக் கல்வியில் சேர்த்தது. படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் வழங்கியது … Read more