அம்பேத்கருக்கு காவி சாயமா?..திருமாவளவன் ஆர்பாட்டத்திற்கு அறைகூவல்.!

மகாராஷ்டிராவின் தாழ்த்தப்பட்ட மகர் சமூகத்தில் பிறந்து, இந்து மதத்தில் கடைபிடிக்கப்பட்ட அத்தனை தீண்டாமை கொடுமைகளையும் அனுபவித்த அண்ணல் அம்பேத்கர், கல்வி மறுக்கப்பட்டபோதும், அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து, நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர் அம்பேத்கர். இந்து மதத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, மூன்று லட்சம் பேரோடு அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறி 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி பௌத்தத்தைத் தழுவினார். மதச்சார்பற்ற, சாதிய ஒடுக்குமுறைகளற்ற இந்தியா என்னும் பெருங்கனவுக்கு விதையிட்ட அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் … Read more

மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாகை: மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தீவிர புயலாக வலுப்பெற்றது மாண்டஸ்.. அடுத்த 24 மணி நேரத்தில் புயலின் பாதை எப்படி இருக்கும்?

வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, படிப்படியாக புயலாக உருமாறியது. சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 440 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள ‘மாண்டஸ்’ புயல், மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் நாளை இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நாளை காலை வரை தீவிர புயலாகவே இருந்து பிற்பகலில் புயலாக … Read more

போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் : கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சிறப்பு அந்தஸ்து

போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் : கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சிறப்பு அந்தஸ்து Source link

#BREAKING : நாளை (9.12.2022) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு விபரம்.!

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் நாளை 18 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவு ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் தற்போது காரைக்காலுக்கு தென்கிழக்கே 500 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 580 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த நிலையில் மாண்டஸ் புயல் அடுத்த 6 மணி நேரத்திற்குள் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, நாளை (வெள்ளிக்கிழமை) … Read more

#BREAKING: புயல் முன்னெச்சரிக்கை …தமிழகத்தில் நாளை மொத்தம் 17 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தமிழகத்தின் வடமாவட்டங்கள் வழியாக கரையை கடக்கக்கூடும் எனவும் இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மாண்டஸ் புயல் காரணமாக அரியலூர், … Read more

புதுச்சேரியை 10 ஆண்டு காலம் பின்னோக்கி கொண்டு சென்றவர் நாராயணசாமி: அமைச்சர் நமச்சிவாயம் குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாண்கோஸ் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ரெயின் கோட் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச ரெயின் கோட் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘முன்னாள் முதல்வர் நாராயணசாமி இந்த அரசு செய்கின்ற நலத்திட்டங்களை பார்த்து வயிற்றெரிச்சலில் பேசி கொண்டிருக்கிறார். அவர் முதல்வராக இருந்த காலத்தில் என்ன திட்டங்களை செயல்படுத்தினார். … Read more

மிரட்டும் மாண்டஸ் புயல்… இன்று இரவு பேருந்துகள் இயங்காது – போக்குவரத்துத்துறை

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று அதீத தீவிர புயலாக சென்னையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் அருகே நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு கரையை கடக்கும் என்றும் புயல் கரையை கடக்கையில் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு … Read more

மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாமக்கல்: மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில்  நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

குடோனில் குட்கா பதுக்கிய 4 பேர் கைது : 1.5 டன் குட்கா பறிமுதல் தனிப்படை போலீசார் நடவடிக்கை

குடோனில் குட்கா பதுக்கிய 4 பேர் கைது : 1.5 டன் குட்கா பறிமுதல் தனிப்படை போலீசார் நடவடிக்கை Source link