எதிர்காலம் டென்னிஸ் விளையாட்டுக்கானது: ரோஹன் போபண்ணா கருத்து

கோவை: கோவை கொடிசியா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபனா, டென்னிஸ் விளையாட்டு குறித்து மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கலந்துறையாடினர் இதனை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கிரிக்கெட்டை கொண்டாடும் அளவுக்கு மக்கள் டென்னிஸ் விளையாட்டை, ரசிப்பதில்லை, அதனை பார்ப்பதில்லை, ஆனால் இந்த விளையாட்டு, மாணவர்களின் படிப்புக்கு மிகுந்த பங்காற்றுகின்றது என்று போபண்ணா தெரிவித்தார். உடலையும், மனதையும், நிலையாக வைத்து கொள்ள டென்னிஸ் … Read more

பரந்தூர் விமான நிலையம்; பதிவுத் துறை அறிவிப்பால் மக்கள் அஞ்சம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளுக்கு நிலம் எடுப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அப்பகுதியில் உள்ள மக்கள் பத்திரப் பதிவு மேற்கொள்ள வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்று பதிவுத் துறை அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதில் காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பரந்தூர்,வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பொடவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட எடையார்பாக்கம், … Read more

பெண் குளிப்பதை வீடியோ எடுத்து இணையத்தில் விற்க முயன்ற இளைஞர்கள்.. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்.!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை வேளச்சேரியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வேலைபார்த்து வருகிறார். அவருடன் மேலும் பல பெண்களும் தங்கியுள்ளனர். இந்த நிலையில் அந்த இளம் பெண் குளித்துக் கொண்டிருந்த போது இளைஞர்கள் இரண்டு பேர் குளியல் அறை அருகே நின்று கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டு குத்தியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் இளைஞர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் … Read more

பாஞ்சாங்குளம் சாதி பாகுபாடு | ஊருக்குள் நுழைய 5 பேருக்கு 6 மாதம் தடை: நெல்லை நீதிமன்றம் உத்தரவு

சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் சாதிய வன்கொடுமை புகாருக்கு உள்ளான 5 பேரை, 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து, திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஞ்சாங்குளத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவரின் பெட்டிக்கடைக்கு கடந்த வாரம் குழந்தைகள் சிலர் மிட்டாய் வாங்க வந்தனர். ஆனால், ஊர்க் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்தக் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்த கடைக்காரர் மகேஸ்வரன், அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் … Read more

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு ரத்து: நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020ஆம் ஆண்டு திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது கரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த … Read more

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையை தொடங்கியது தேசிய புலனாய்வு முகமை

மதுரை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையை தொடங்கியது தேசிய புலனாய்வு முகமை என்ற தகவலும், அது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் கரும்பு கடையில் உள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனைக்கு பிறகு அவரை கைது … Read more

சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் 13 நாட்கள் செல்ல அனுமதி

மதுரை: சதுரகிரி மலைக்கோயிலுக்கு புரட்டாசி அமாவாசை, நவராத்திரி விழாவுக்காக பக்தர்கள் 13 நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. நாளை முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம்; மழை பெய்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை… PFI அமைப்பை சேர்ந்த சுமார் 100 பேர் கைது

மதுரை, திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம், கேரளாவில் சுமார் 60 இடங்களில் NIA அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் உள்ளவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போலவே எஸ்.டி.பி.ஐ கட்சி … Read more

ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் மரணம்!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக இருந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராதா நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராவணன் மாரடைப்பால் காலமானார். இவர் சசிகலாவின் சித்தப்பா கருணாகரன் என்பவரின் மருமகன். அதிமுகவில் சசிகலா செல்வாக்கு மிக்கவராக இருந்த காலகட்டத்தில் கோவை மண்டல அதிமுகவின் அறிவிக்கப்படாத தளபதியாக இவர் பணியாற்றினார். கொங்கு மண்டலத்தை சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடையாளம் காட்டியவர் இவர். சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை … Read more