26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: ஈரோடு, கிருஷ்ணகிரி, சிவகங்கை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களில் இன்று (அக்.12) இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், … Read more

அதிமுக விஐபிக்கள் சொத்து வாங்க உதவி சர்ச்சையில் சிக்கியவர் சேலம் பத்திரப்பதிவு அலுவலக உதவியாளர் வீட்டில் சோதனை: விஜிலென்ஸ் போலீசார் அதிரடி; முக்கிய ஆவணங்கள் சிக்கியது

சேலம்: சேலத்தில் அதிமுக ஆட்சியின்போது விஐபிக்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்து சர்ச்சையில் சிக்கிய உதவியாளர் வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சேலம் சூரமங்கலம் மேற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக இருப்பவர் காவேரி(58). இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக 200 சதவீதம் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று காலை 7 மணிக்கு, சேலம் இரும்பாலை கணபதிபாளையத்தில் உள்ள காவேரி வீட்டிற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் … Read more

"நான் திருமணம் செய்து கொள்ளாததற்கு இது தான் காரணம்." திரிஷா ஓபன் டாக்.!

சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் சீனியர் நடிகைகளில் ஒருவர்தான் திரிஷா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். என்னதான் சினிமாவில் சாதித்தாலும் அவர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது அவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாக இருக்கிறது.  ஏற்கனவே நிச்சயதார்த்தம் வரை சென்று ஒரு திருமணம் நடக்காமல் போய்விட்டது. அதன் பிறகு தெலுங்கு நடிகர் ராணாவை அவர் காதலிப்பதாக கூறப்பட்டது. இத்தகைய சூழலில், சமீபத்தில் அவர் ஒரு பேட்டி அளித்த … Read more

பிரபல கல்லூரி மாணவிகள் கேண்டீனில் மோதி கொள்ளும் வீடியோ வைரல்..!!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தயானந்த சாகர் என்ற பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி கேண்டீனில் சக மாணவ மாணவிகள் சூழந்திருக்க, இரு மாணவிகள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.  இதில் ஒரு மாணவி பேசி கொண்டிருக்கும்போதே, திடீரென மற்றொரு மாணவியின் கன்னத்தில் பளார் என்று அடித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த, அடி வாங்கிய மாணவி பதிலுக்கு பல முறை அந்த மாணவியை அடிக்கிறார். இந்த சம்பவம் நடந்தபோது, உடனிருந்த மாணவிகள் சண்டையை … Read more

ரூ.5.53 கோடி சொத்து குவிப்பு | திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை சிபிஐ தாக்கல் – முழு விவரம்

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி திமுக எம்.பி.யுமான ஆ.ராசா, கடந்த 1999-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2010 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.92 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக சிபிஐ கடந்த 2015-ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. அதில், ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, மருமகன் பரமேஷ், கோவை ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, ஆ.ராசாவின் நெருங்கிய கூட்டாளியான சாதிக் பாஷாவின் மனைவி ரெஹா பானு … Read more

பழநி – கொடைக்கானல் ரோப்கார் ஆஸ்திரிய வல்லுநர் குழு ஆய்வு

கொடைக்கானல்: பழநி- கொடைக்கானல் இடையே ரோப்கார் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ரூ.450 கோடியில் அமையவுள்ள இத்திட்டம் குறித்து ஆஸ்திரிய நாட்டு வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானல் மற்றும் பழநி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக ரோப்கார் திட்டம் இருந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய … Read more

மது போதையில் தகராறு.! 3 பேரை கத்தியால் குத்திய லாரி ஓட்டுநர்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் மது போதையில் நடந்த தகராறில் லாரி ஓட்டுநர் 3 பேரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் பூப்பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் அழகுமுத்து (40). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நண்பர்களான அதிக பகுதியை மணிகண்டன் (38) மற்றும் முருகன் (35) ஆகியோருடன் சேர்ந்து அழகுமுத்து தாளமுத்து நகர் பகுதியில் உள்ள மதுபான கடை அருகே உட்கார்ந்து மது அருந்தினார். அப்போது அங்கு வந்த … Read more

ரசாயனத்தை தண்ணீர் என்று நினைத்து மதுவில் கலந்து குடித்த 2 தொழிலாளர்கள் பலி!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வீரசோழபுரம் கிராமத்தில் கடல்பாசியில் இருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் பகுதியை சேர்ந்த ரவி (57), தனது மனைவி ஜோதி (55), மகன் பாலமுருகன் (20) ஆகியோருடன் கம்பெனி வளாக குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். அதேபோல் மதுரை வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய … Read more