திருப்பத்தூரில் 2பெண்கள் உள்பட 4 போலி மருத்துவர்கள் கைது..!

திருப்பத்தூரில் 2 பெண்கள் உள்பட 4 போலி மருத்துவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஆரிப் நகரைச் சேர்ந்த அப்துல்லா,  அங்கநாதவலசைச் சேர்ந்த வேலாயுதம், சுண்ணாம்புகாளைச் சேர்ந்த உமாசரஸ்வதி மற்றும் சென்னம்மாள் ஆகிய 4 பேரும் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு தங்களுடைய பகுதிகளில் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவர்களின் இடங்களுக்கு சென்று சோதனை மேற்கொண்ட போலீசார் மருந்து மாத்திரைகள் மற்றும் சிரிஞ்சுகளை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து … Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து விவாதம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் 17-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை நேற்று மாலை 6.10 மணிக்கு கூடியது. 7 மணிவரை இக்கூட்டம் நடைபெற்றது. துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் நா.முருகானந்தம், தொழில்துறை … Read more

இபிஎஸ்ஸை சந்திக்க மறுத்த பிரதமர்? இது தான் காரணமா?

எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்ற போதும் பிரதமர் மோடியை சந்திக்க முடியாததற்கு பெங்களூர் புகழேந்தி காரணம் ஒன்றை கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து பணியாற்றிய போதே கட்சிக்குள் எழும் பிரச்சினைகளை சரி செய்ய டெல்லியை நோக்கி விரைவார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேசுவார்கள். அதன்பின்னர் இருவரும் ராசியாகிவிடுவார்கள். தற்போது இருவரும் இரு துருவங்களான நிலையில் எவ்வளவு முயன்றாலும் பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை. ஒருமுறை டெல்லி சென்று … Read more

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தது தமிழக அரசு!

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 10% போனஸ்! தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10% வரை போனஸ் மற்றும் கருணை தேவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை அரசு தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால் … Read more

முதியவர் வசதியானவர் என்று தெரிந்த ஒரு பெண் போட்ட பலே ஸ்கெட்ச்..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் எருமபட்டி – திப்பிலசேரி பகுதியில் வசித்து வருபவர் ராஜி (35). இவர் குந்நங்குளம் பகுதியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய ஆண் நண்பர் மூலம் சாவக்காடு பகுதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவருடன் ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த முதியவர் 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் ராஜியும், அந்த முதியவரும் நெருங்கி பழகிய நிலையில் ஒருநாள் அழகு நிலையம் … Read more

வறுமையில் வாடும் கலைமாமணி விருதாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி – முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: இயல் இசை நாடக மன்றம் சார்பில், வறுமையில் வாடும் கலைமாமணி விருதாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பொற்கிழி தொகை, 500 கிராமியக் கலைஞர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில், இளம் கலைஞர்களை ஊக்குவித்தல், வெளிநாடுகளில் தமிழக கலைகளை பரப்புதல், கலைச்சேவை புரிந்த கலைஞர்களுக்கு மாநில அளவில் கலைமாமணி விருது வழங்குதல், அரிய கலை வடிவங்களை … Read more

வரும் நவ.12-ல் இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல்…!

தேர்தல் தேதி அட்டவணையை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 17ல் தொடங்குகிறது. அக்டோபர் 25ம் தேதி வேட்புமனுத் தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 27ம் தேதி நடக்கும். வேட்புமனுவை திரும்பபெற அக்டோபர் 29ம் தேதி கடைசி நாள். பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்படும். … Read more

அக்.17, 18-ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வரும் 17-ம் தேதியும், தென் மாவட்டங்களில் 18-ம் தேதியும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது … Read more