பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென தவறி கீழே விழுந்த 2 வயது குழந்தை – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

சென்னை மதுரவாயலில் வீட்டின் முதல் மாடி பால்கனியில் விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை கால் இடறி கீழே விழுந்ததில், தலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கங்கை அம்மன் நகரில் வசித்து வரும் கால் டாக்ஸி ஓட்டுனராக பிரகாஷ் -ன் இரண்டு வயது மகள் தியா தனது அத்தை வீட்டில் முதல் மாடியில் விளையாடிக்கொண்டிருந்த போது கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் படுகாயமடைந்த குழந்தை தியா சென்னை எழும்பூர் குழந்தைகள் நல … Read more

பணபலன்கள் வழங்க கோரி ஆசிரியர் தொடர்ந்த வழக்கு: பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உயர் நீதிமன்ற முழு அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பணப்பலன் வழங்காததை எதிர்த்து ஆசிரியர் தொடர்ந்த வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து, 1993-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், பணப்பலன்கள் வழங்கக் கோரி ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்குகளில், மனுதாரர்களுக்கு பண பலன்களை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. … Read more

பேஸ்புக்கில் தொல் திருமா குறித்து அவதூறு பதிவு; தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி அதிரடி கைது..!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் சேலம் கோட்ட நிர்வாகியை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இபிஎஸ், ஓபிஎஸ் அனுப்பிய கடிதம்? அப்பாவு விளக்கம்! நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த சபரிநாதன் தமிழ்நாடு விஷ்வ ஹிந்த பரிஷத்தின் முன்னாள் சேலம் கோட்ட செயலாளர் ஆவார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு முகநூல் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குறித்து … Read more

பருவமழையை சமாளிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் 3 நாட்களாக பெய்த கன மழை காரணமாக மாட்டுத்தாவணி அருகே பாசன வாய்க்கால்களில் வந்த வெள்ள நீரால் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்தது. அதனை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து  மழை நீரால் பாதிக்கப்பட்ட  பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்யும் 50 க்கும் மேற்பட்ட வட மாநில  மக்களை நேரில் சந்தித்த ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கு  தேவையான அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கினார்.  … Read more

8,000 கிலோ சம்பங்கி பூக்கள் குளத்தில் கொட்டி அழிப்பு; சத்தி விவசாயிகள் வேதனை

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரியப்பம்பாளையம், புளியங்கோம்பை, பெரியகுளம், சிக்கரசம்பாளையம், ராமபைலூர், அய்யன் சாலை, எரங்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் சம்பங்கி பூக்கள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த வாரம் ஆயுத பூஜையன்று சம்பங்கி ஒரு கிலோ ரூ.280க்கு விற்பனையான நிலையில், … Read more

அரக்கோணம்: கடை முன்பு இருந்த ஸ்கூட்டியை லாவகமாக திருடிச் சென்ற இளம் பெண் கைது!

அரக்கோணத்தில் இளம்பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலான நிலையில், திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் மற்றும் நகரில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெருமூச்சு என்றப் பகுதியில் டெய்லர் கடை முன்பாக நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் ஒன்று திருடுப் போனது. இதுகுறித்து அரக்கோணம் … Read more

“மக்களை துன்புறுத்த அரசு அமையவில்லை”- மின்கட்டண உயர்வை எதிர்த்து அ.ம.மு.க ஆர்ப்பாட்டம்

“மக்களை துன்புறுத்த அரசு அமையவில்லை”- மின்கட்டண உயர்வை எதிர்த்து அ.ம.மு.க ஆர்ப்பாட்டம் Source link

வெல்டிங் வைத்த போது திடீரென லாரியில் தீப்பிடிப்பு.! சுமார் 150 டயர்கள் தீயில் எரிந்து நாசம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் வெல்டிங் வைத்த போது திடீரென லாரியில் தீ பிடித்ததால் சுமார் 150 டயர்கள் தீயில் எரிந்து நாசமாகின. புதுச்சேரியிலிருந்து மகாராஷ்டிராவிற்கு எம்.ஆர்.எப் டயர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது, லாரி பம்பர் பகுதியில் திடீரென ஏற்பட்ட பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கூட்ரோடு சாலையில் உள்ள ஒரு கடையில் லாரியை நிறுத்தி வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென லாரியில் தீப்பிடித்தது. தியானது கொழுந்துவிட்டு எரிந்து … Read more

திமுகவை வீழ்த்த ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைக்க தயார்: டிடிவி தினகரன் 

சென்னை: திமுகவை வீழ்த்த ஓபிஎஸ்-ன் அழைப்பை ஏற்று கூட்டணிக்குச் செல்ல தயாராக இருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக ஒன்றிணைவது தொடர்பாக ஓபிஎஸ் விடுத்த அழைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ” நாங்கள் அனைவரும் ஒருதாய் மக்களாக இருந்தது உண்மை. அவர்கள் எங்களை வெளியேற்றியதால் தனி இயக்கத்தை தொடங்கினோம். எனவே இனிமேல் அவர்களுடன் … Read more

தமிழகத்தில் அமையும் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்!

தேவாங்குகள் சிறிய, இரவு நேர பாலூட்டிகள். அவை மரவகை இனத்தைச் சார்ந்தது. தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனம் விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை பயக்கின்றன. இந்த இனங்கள் சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், (IUCN) தேவாங்கு இனத்தினை அழிந்து வரும் இனமாக பட்டியலிட்டுள்ளது. இந்த உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் இவைகளுக்கான அச்சுறுத்தல்களைத் தணித்தல் ஆகியவற்றின் … Read more