ஒரு சிறு கவனக்குறைவு 38 வயது நபரின் உயிரை காவு வாங்கியது..!!

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள வாலிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (38). இவரது மனைவி பிரபா. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தும்மக்குண்டுவில் உள்ள மாமனார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து நடுவழியில் நின்றது. ஒரு வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி வந்தவர், ஒரு கையில் பீடியைப் … Read more

தொகுப்பூதிய பணியாளர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு

சென்னை: தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் அனைத்துவிதமான தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் 16 ஆயிரம் ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் 60 வயது வரை தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் செப்.10-ம் தேதி அறிவித்தார். அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் … Read more

குளிக்கும் வீடியோவை டாக்டருக்கு அனுப்பிய மாணவி..!! அதுவும் சக விடுதி பெண்களை..!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (31). இவர் எம்பிபிஎஸ் படித்து முடித்துவிட்டு கமுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், இவரது கிளினிக் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி என்பவர் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, பி.எட்., படித்து வருகிறார். ஆசிக்கும், காளீஸ்வரியும் நீண்ட நாட்களாக பழகி வந்த நிலையில், காளீஸ்வரி தன்னுடன் தங்கியுள்ள விடுதி பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் … Read more

ஆம்னி பேருந்து கட்டணத்தை உரிமையாளர்களே நிர்ணயிப்பார்கள் – போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஆம்னி பேருந்து கட்டணத்தை அதன் உரிமையாளர்கள் ஓரிருநாளில் நிர்ணயம் செய்வார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். விழாக் காலங்களின்போது ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், போக்குவரத்து துறை ஆணையர் இல.நிர்மல்ராஜ் உள்ளிட்ட … Read more

செல்போனில் மூழ்குவதால் குடும்பத்தினர் பேசுவதே குறைந்தது ஆன்லைன் விளையாட்டை தடை செய்வது இயலாத காரியமாக உள்ளது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது இயலாத காரியமாக உள்ளது. செல்போனில் மூழ்குவதால் பெற்றோர், குழந்தைகள் பேசுவதே குறைந்துள்ளது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். நாகர்கோவிலை சேர்ந்த ஒரு பெண், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனியார் கல்லூரியில் மகளை கடந்த 6ம் தேதி முதல் காணவில்லை. மகளுக்கு பப்ஜி மற்றும் ஃபிரீ பயர் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் உண்டு. இந்த விளையாட்டுகள் மூலம் ஜெப்ரின் என்ற இளைஞர் பழக்கமாகி உள்ளார். … Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

தமிழகத்தில் தஞ்சாவூர், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர்,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, … Read more

திருவாரூரில் கனமழை 25,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மூழ்கியது

திருவாரூர்: திருவாரூரில் கனமழையால் 25 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த 26ம் தேதி நள்ளிரவு முதல் நேற்றுமுன்தினம் காலை வரை பலத்த மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாலையும் மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடிய விடிய மழை கொட்டியது. திருவாரூர், நன்னிலம் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கடந்த … Read more

“இது தொழிலாளர்களின் விடியலுக்கான திமுக அரசு” – தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன்

சென்னை: “திமுக அரசு, தொழிலாளர்களின் விடியலுக்கான அரசு” என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார். தொழிலாளர் நலத் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் பேசுகையில், “தமிழக முதல்வர் தலைமையிலான அரசு மக்களின் அரசு. தொழிலாளர்களுக்கான அரசு. இந்த அரசு தொழிலாளர்களின் விடியலுக்கான அரசு. இவ்வரசாங்க தொழிலாளர் துறையானது சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறது. இத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த அனைத்து அலுவலர்களும் சிறந்த முறையில் இத்துறை செயல்பட நாம் … Read more

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு சேலம் முன்னாள் எஸ்பி சாட்சியம்

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீதான வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இவ்வழக்கு நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு சாட்சியான சேலம் மாவட்ட முன்னாள் எஸ்பி குணசேகரன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து விசாரணையை மீண்டும் … Read more

சசிகலா மேல்முறையீட்டு வழக்கு: அக்.26-ல் இறுதி விசாரணை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி சசிகலா தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை இறுதி விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதிமுக பொது செயலலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொது செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுத்துள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற … Read more