17 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைகிறது; போக்குவரத்து நெரிசலை குறைக்க கோவில்பட்டியில் புறவழிச்சாலை: முதற்கட்ட பணிகள் தொடங்கியது

கோவில்பட்டி: கோவில்பட்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான நில எடுப்பு உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர். சென்னை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வளர்ந்து வரும் தொழில் நகரமாக கோவில்பட்டி அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் 2வது பெரிய தொழில் நகரம் இது. கோவில்பட்டியில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை வசதிகள், போதிய அளவில் இல்லை. கடந்த ஆட்சியில் மாநில நெடுஞ்சாலைத்துறை … Read more

பட்டுக்கோட்டை: கடன் பிரச்னையால் இரண்டு வயது மகனுடன் தாய் எடுத்த விபரீத முடிவு

பட்டுக்கோட்டை அருகே கடன் பிரச்னை காரணமாக இரண்டு வயது மகனை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை ஊராட்சி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்ராஜ் என்பவரின் மனைவி மாலதி (22). ஜான்ராஜ் தேங்காய் உரிக்கும் கூலித் தொழிலாளி. மாலதி அப்பகுதியில் தனியார் சுயஉதவிக் குழுவிற்கு தலைவியாக செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், பல்வேறு சுயஉதவிக் குழுவிற்கு மாலதி பணம் செலுத்த வேண்டிய நிலையில், தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் … Read more

மாணவர்களே தயாரா..!! வரும் 15-ம் தேதி மாதம் ரூ. 1,500 ஊக்கத்தொகைக்கு தேர்வு..!!

தமிழ்நாட்டில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் விதமாக பல சலுகைகளை அரசு அளித்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் முதல் தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் மொழி இலக்கிய திறனறிதேர்வு வரும் 15-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் அனைத்து வகை பாடப்பிரிவினை எடுத்து படிக்கும் மாணவர்களும் பங்கேற்கலாம். தமிழ் மொழியில் மாணவர்களுக்கு உள்ள ஆர்வத்தினை அதிகரிக்க இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக, இந்த தேர்வில் … Read more

திமுக தலைவர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

சென்னை: திமுக தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கான தேர்தலும், தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கானத் தேர்தல் தொடர்பான மற்றும் திமுகவின் 15வது பொதுத் தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம் 9ம் தேதி சென்னை அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. ‘இதில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் … Read more

நித்யானந்தாவின் தீவிர பக்தன் நான்- திருச்சி சூர்யா பேட்டி!

நித்யானந்தாவின் கைலாச விருதுகளில், பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யாவிற்கு விருது அறிவிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருச்சி சூர்யா பேசுகையில்; இந்து மதத்தை பாதுகாக்கும் வகையிலும், இந்து மதத்துக்கு ஆதரவாகவும் ஊடகங்களில் பேசிவரும் எனக்கு கைலசாவிலிருந்து சுவாமி நித்யானந்தா சார்பாக அவர்கள் முன்னிலையில், தர்ம ரக்ஷன அவார்டு காணொலிக் காட்சி மூலமாக சுவாமிஜி வழங்கினார்கள். அதனால் 100% மகிழ்ச்சி அடைகிறேன். இந்து பெருமையை பேச பிஜேபில் அநேகர் இருக்கையில், உங்களுக்கு கொடுத்தது எப்படி என்ற … Read more

TN Weather Forecast: உஷார் மக்களே!! இங்கெல்லாம் இடியுடன் கூடிய மழை பெய்யும்

தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 07.10.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 08.10.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் … Read more

திருப்பூர் விவேகானந்தா காப்பகம் மூடப்படுகிறது: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் விவேகானந்தா காப்பகம் மூடப்படுகிறது என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். திருப்பூர் அருகே அவினாசி, பூண்டி ரிங் ரோட்டில் விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 மாணவர்கள் பலியானார்கள். வாந்தி, மயக்கத்துடன் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க 3 குழுக்கள் அமைத்து அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார். சமூக நலத்துறை … Read more

கழுகு தாக்கியதால் படுகாயமடைந்த தேவாங்கு ; காப்பாற்ற போராடும் வனத்துறை மருத்துவர்கள்

கழுகு தாக்கியதால் காயமடைந்த தேவாங்கை நக்சல் தடுப்பு படையினர் காப்பாற்றி மீட்டுள்ளனர். அழிந்து வரும் உயிரினமான தேவாங்கை காப்பாற்ற வனத்துறை மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, மான், காட்டெருது என பல்வேறு வன உயிரினங்களோடு சர்வதேச அளவில் அழிந்து வரும் உயிரினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கழுதைப்புலி, தேவாங்கு, சிங்கவால் குரங்குகள் போன்ற அரிய வகையான உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் … Read more

‘லவ் ஃபெயிலியர்னா தாடி வளர்க்கணும்… இந்த சண்டாளப் பய ஊர் ஊரா போய் சண்ட போடச் சொல்றான்..!’ வந்தியத் தேவன் மீம்ஸ்

‘லவ் ஃபெயிலியர்னா தாடி வளர்க்கணும்… இந்த சண்டாளப் பய ஊர் ஊரா போய் சண்ட போடச் சொல்றான்..!’ வந்தியத் தேவன் மீம்ஸ் Source link

மக்களே, 3 மாதம் கவனமா இருங்க.. டெங்கு பாதிப்பு அதிகரிக்கலாம்..!

தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு தினமும் 500 என்ற சராசரி நிலையில் இருந்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 2,915 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 481; செப்டம்பரில் 572 பேர் என, பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பருவகால காய்ச்சல்களுடன், டெங்குவும் வேகம் எடுத்துள்ளது. வரும் நாட்களிலும் டெங்கு பாதிப்பு மேலும் வேகம் எடுக்கும் என மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கின்றனர். … Read more