குடும்பம் நடத்த வர மறுத்ததால் காதல் மனைவி குத்தி கொலை: திருமண நாளில் சோகம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அக்பர் காலனி தெருவை சேர்ந்தவர் அருள்(49). இவரது மனைவி ரேவதி(45). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து 25 ஆண்டுகளாகிறது. தீபன்ராஜ் என்ற மகனும், மகாரத்யா என்ற மகளும் உள்ளனர். பேருந்து நிலைய பகுதியில் சில்லரை வியாபாரம் செய்யும் அருள் மது போதைக்கு அடிமையானவர். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் வீட்டு செலவுக்கு அருள் பணம் கொடுப்பதில்லை. இதனால் மயிலாடுதுறை பட்டங்கலத்தெருவில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து … Read more

பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை சாதி பாகுபாடு பேசிய வழக்கு.! காவல்துறை பதிலளிக்க உத்தரவு.!

சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பச்சையப்பன் கல்லூரி தமிழ் துறை தலைவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கூடாது என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை பேராசியர் அனுராதா, சாதி பாகுபாட்டுடன் மாணவர்களுடன் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த ஆடியோவில், ‘முகத்தைப் பார்த்தாலே BC-யா? MBC-யா அல்லது SC-யா எனத்தெரிந்துவிடும். நீ … Read more

பிரபல ரவுடியின் ஆடம்பர திருமண வரவேற்பு நிகழ்ச்சி.. போலீசார் பலத்த பாதுகாப்பு.. காரணம் என்ன.?

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சோமமங்கலம் நடுவீரபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி லெனின். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என பல வழக்குகள் உள்ளது. அதேபோல் இவரது தம்பி நரேஷ்பாபு என்ற ஆலன் ஜான்சன் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள லீலாவதி அரங்கத்தில் நரேஷ்பாபுக்கும் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த காலின் ஹேனா செரின் என்பவருக்கும் … Read more

சென்னை மெட்ரோ ரயில்களில் நேற்று ஒரே நாளில் 2.30 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில், நேற்று (செப்.12) ஒரே நாளில் மட்டும் 2.30 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும் வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதன் பயனாக சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. இது பயணிகளின் நல்வரவேற்பை … Read more

லஞ்ச வழக்கில் விடுதலையான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு!

சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவில் உள்ள அலுமினிய பாத்திர உற்பத்தி நிறுவனத்துக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக உதவிப் பொறியாளர்களாக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், சாந்தி ஆகிய இருவரும் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான லஞ்ச வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்து 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, இடைநீக்க காலத்தை வரன்முறைப்படுத்தி, தங்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி சென்னை … Read more

மகாகவி பாரதியார் படித்த வகுப்பறையில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட மாணவிகள்

மகாகவி பாரதியார் தனது இளமை பருவத்தில் நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியபடி நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் பள்ளியில் பயின்றார். அவரது நினைவை போற்றும் வகையில் பாரதியார் பயின்ற வகுப்பறையை நாற்றங்கால் என பெயரிட்டு பள்ளி நிர்வாகத்தினர் பராமரித்து வருகின்றனர்.  மேலும் பெண் விடுதலை குறித்தும் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் பாரதியார் அதிக பாடல்கள் பாடியுள்ளதால் இன்று வரை அந்த வகுப்பறையில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் … Read more

தமிழக அரசின் கடனை அடைக்க சவுதியில் இருந்து ரூ90,000 அனுப்பிய திருச்சி இன்ஜினியர்

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் கெப்பம்பட்டி கிழக்கு காலனியை சேர்ந்தவர் சின்னராஜா செல்லதுரை. இவர் சவுதி அரேபியா உள்ள ஜிந்தாவில் வேலை பார்த்து வருகிறார். இவர் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், நான் தற்போது சவுதி அரேபியாவில் இன்ஜினியராக வேலை பார்க்கிறேன். பொருளாதாரம் படித்துள்ளேன். 2022- 23ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிக்கையை கடந்த மார்ச் மாதம் தொலைக்காட்சி வழியாக அறிந்தேன். அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி … Read more

சென்னையை உலகத் தரத்தில் மேம்படுத்த CUMTA-வில் 4 துணைக் குழுக்கள்: முழு விவரம் 

சென்னை: சென்னையை உலகத் தரத்திற்கு மேம்படுத்த அமைக்கப்பட்டுள்ள சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமத்தில் 4 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. உலக வங்கி நிதி உதவியுடன் சென்னை மாநகர கூட்டாண்மை திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இதில் மிக முக்கியமாக இயந்திர வாகனம் சாரா போக்குவரத்து திட்டம் மற்றும் சாலைகள் மறு சீரமைப்புத் திட்டம், மல்டி மாடல் இன்டகிரேஷன் என்ற அனைத்து போக்குவரத்து வசதிகளையும் இணைக்கும் திட்டம், வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இந்தத் திட்டத்தை சென்னை … Read more

தனித் தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு: இனப்படுகொலை குறித்து இந்தியா நிலைப்பாடு என்ன?

இலங்கை போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை தண்டிப்பது குறித்து இந்தியா எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது என்று கூறியுள்ளார். அதில், “இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை; இனியும் தாமதிக்காமல் அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் இந்தியாவின் நிலை வரவேற்கத்தக்கது; ஆனால், போதுமானதல்ல. ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 51ஆவது … Read more

சென்னையில் கொடூரம்; நாயை கட்டையால் அடித்து கொலை செய்த மனித மிருகம்!

சென்னை பெரம்பூர் ஹைதர்கார்டன் மெயின் தெருவை சேர்ந்தவர் 32 வயதுடைய கார்த்திக். இவர் அவருடைய வயதான பெற்றோர்களுடன் சொந்த வீட்டில் வசித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் அவர் வேலை செய்யும் இடத்தில் இருந்து 2 அறை மாத குட்டியாக இருந்த நாய் ஒன்றை வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். மேலும் அந்த குட்டி நாய் கருப்பு நிறத்தில் இருந்ததால் பிளாக்கி என்று அழகாக பெயர் வைத்து அவரின் குடும்பத்தின் ஒரு நபராக … Read more