தமிழகத்தில் ஒருபோதும் இந்தியை திணிக்க முடியாது: சென்னை ஆர்ப்பாட்டத்தில் வைகோ உறுதி
சென்னை: தமிழகத்தில் இந்தியை ஒருபோதும் திணிக்க முடியாது என்று மதிமுக பொது செயலாளர் வைகோ உறுதியாக தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மதிமுக சார்பில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுகபொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், வைகோ பேசியதாவது: இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள். … Read more