குண்டும் குழியுமான தண்டலச்சேரி-புதுகும்மிடிப்பூண்டி சாலை: விபத்தில் சிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி  ஊராட்சி மற்றும் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்குகிறது. இந்த தொழிற்சாலைகளில் ஆத்துப்பாக்கம், ரெட்டம்பேடு், பூவலம்பேடு, பெரிய புலியூர், கண்ணன்கோட்டை, ஜி. ஆர். கண்டிகை, கவரப்பேட்டை, கெட்ணமல்லி, சக்திவேடு, கண்ணம்பாக்கம், தேர்வழி, பன்பாக்கம், பெருவாயில், புதுவாயில், செங்குன்றம், பஞ்செட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் இரவு பகலாக புது கும்மிடிப்பூண்டி இருந்து தண்டலச்சேரி செல்லும் சாலையில் … Read more

செஞ்சி-பிறந்த நாளுக்கு மாணவன் கொடுத்த சாக்லெட்டை சாப்பிட்ட சக மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

செஞ்சி அருகே பிறந்த நாளுக்கு மாணவன் கொடுத்த சாக்லெட் சாப்பிட்ட 7 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், 30 மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அனந்தபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவனின் பிறந்த நாளை முன்னிட்டு வகுப்பில் உள்ள சகமானவர்களுக்கு சாக்லெட் வழங்கியுள்ளார். இந்த சாக்லெட்டை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஏழு மாணவர்களுக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக … Read more

Tamil news Today live: ஒரே நேரத்தில் எஸ்.பி வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி

Go to Live Updates பெட்ரோல், டீசல் விலை சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 115ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் எஸ்.பி.வேலுமணி, அவரது நண்பர் … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (13.09.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 13/09/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 20/18/14 நவீன் தக்காளி 40 நாட்டு தக்காளி 35/33 உருளை 34/25/20 சின்ன வெங்காயம் 40/35/30 ஊட்டி கேரட் 100/90/85 பெங்களூர் கேரட் 65/60 பீன்ஸ் 70/60 பீட்ரூட். ஊட்டி 50/45 கர்நாடக பீட்ரூட் 30 சவ் சவ் 20/18 முள்ளங்கி 40/35 முட்டை கோஸ் 20/15 வெண்டைக்காய் 30/25 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி … Read more

விதிகளை மீறி உதவித் தொகை பெற்றுவந்த மாற்றுத் திறனாளிகள் 8 ஆயிரம் பேர் நீக்கம்: வருவாய் துறை நடவடிக்கை

சென்னை: விதிகளை மீறி உதவித் தொகை பெற்று வந்த 8 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளை நீக்கி வருவாய் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில், 40 சதவீத மாற்றுத் திறன் உடையவர்களுக்கு வருவாய் துறையின் மூலம் மாதம்தோறும் ரூ.1,000 சமூக பாதுகாப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகையை 3,74,000 மாற்றுத் திறனாளிகள் பெற்று வருகின்றனர். விதிகளை மீறி சிலர் உதவித் தொகைகளை பெற்று வந்ததாக … Read more

TANGEDCO காலி பணியிடங்கள்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 8000 கள உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், டி.என்.பி.எஸ்.சிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலைச்செல்வி உள்ளிட்ட பலர் தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2016ஆம் ஆண்டு கள உதவியாளர் பணிக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு, எழுத்து மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றின் மூலம் 3170 பேர் தேர்ச்சி பெற்றதாகவும், அவர்களில் 900 பேர் மட்டும் நியமனம் … Read more

திமுக ஆட்சியில் கொலை..கற்பழிப்பு அதிகரிப்பு – சசிகலா சரமாரி குற்றச்சாட்டு

சேலம் மாவட்டத்திற்கு புரட்சிப் பயணம் மேற்கொண்ட சசிகலா, சேலம் மற்றும் ஆத்தூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்தார். அப்போது, கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து  அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பேசிய சசிகலா, “அதிமுகவில் ஒரே குடும்பமாய் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். திமுக அரசு பதினைந்து மாத கால ஆட்சியில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் எந்த திட்டங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தில் விலைவாசி உயர்வு அதிகரித்து … Read more

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ஊத்துக்கோட்டை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள்  கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது . இதனால் நேற்று  ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில்  மாணவர்களின்  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் லோக்நாத் தலைமை தாங்கினார் . போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள்  சிவா , சீனிவாசன்,   துணை தலைமையாசிரியர் அரிநாதன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   பேரணியை இன்ஸ்பெக்டர் ஏழுமலை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த … Read more

தேனி: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ராணுவ வீரர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலுரைச் சேர்ந்தவர் தர்மராஜ் (23). இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் இவர், இருசக்கர வாகனத்தில் தனது நண்பரான லியோ சாம் (26) என்பவருடன் கூடலூர் அருகே உள்ள கம்பம் வந்துவிட்டு மீண்டும் கூடலூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது கூடலூரில் இருந்து கம்பம் நோக்கி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் (33) என்பவர் இருசக்கர வாகனத்தில் கம்பம் … Read more