நெல்லை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு – சாக்கடை பெருக்கெடுத்து ஓடும் அவலம்
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் நிலையத்தைச் சுற்றி சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கடும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு பல்வேறு அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இங்கு வந்துசெல்லும் நோயாளிகளின் நலனுக்காக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது சொந்த செலவில் மருத்துவமனையின் நுழைவாயில் அருகே இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட … Read more