விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் மூலம் தமிழகம் ஆன்மிக பூமி என்பது நிரூபணம்: பாஜக திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் கருத்து

சென்னை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் மூலம் தமிழகம் ஆன்மிக பூமி என்பது நிரூபணமாகியுள்ளதாக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சி பெருவிழா மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி பேசியதாவது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் மூலம், தமிழகத்தில் … Read more

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்

வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா ஆகாரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி கலைச்செல்வி(43).கடந்த 1ம் தேதி பைக் மோதி காயமடைந்த கலைச்செல்விக்கு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அன்றிரவே, மூளைச்சாவு ஏற்பட்டது. குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். இதையடுத்து 2 கண்கள், 2 சிறுநீரகம், கல்லீரல், இதயம் ஆகியவற்றை  தானமாக பெற்று சென்னை காவேரி மருத்துவமனை, ராமச்சந்திரா மருத்துவமனை, பிரசாந்த் மருத்துவமனை, வேலூர் … Read more

‘புதுமைப்பெண்’ திட்டம் இன்று தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பங்கேற்பு

சென்னை: அரசுப் பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பு உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். விழாவில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பங்கேற்று, 25 தகைசால் பள்ளிகள், 15 மாதிரிப் பள்ளிகளை திறந்து வைக்கிறார். ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் … Read more

ஒரே நாளில் 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் கொடுத்த அப்டேட்!

தமிழகம் முழுவதும் நேற்று (04.09.2022) நடைபெற்ற 35வது சிறப்பு மெகா கோவிட்- 19 தடுப்பூசி முகாமில் 12.28 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார் தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50,000 சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நேற்று நடைபெற்றன. இதுவரை நடைபெற்ற 34 மெகா கோவிட் … Read more

தமிழருக்கு வாய்ப்பளிக்காத என்எல்சி தமிழ்நாட்டுக்கு தேவையில்லை: ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேச்சு

நெய்வேலி:  நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தை கண்டித்து பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். இதில் அன்புமணி பேசியதாவது: கடந்த 66 ஆண்டுகளில் என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பும், உரிய இழப்பீட்டுத் தொகையோ வழங்காமல் இன்று வரை மக்களை அகதிகளாக வைத்துள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக மாற்றி வருகிறது. என்எல்சி நிர்வாகம் நிலக்கரி எடுப்பதன் மூலம் … Read more

#தர்மபுரி || மின்சாரம் தாக்கி பலியான தள்ளுவண்டி கடைக்காரர்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

மின்சாரம் தாக்கி தள்ளு வண்டி ஓட்டல் கடைக்காரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், மல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.  இவர் அந்த பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே தள்ளு வண்டியில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வந்தார்.  வழக்கம் போல சம்பவதன்று விற்பனை முடிந்து தள்ளுவண்டியை தள்ளி கொண்டு வீட்டுக்கு சென்றார். அப்போது, விநாயகர் சதுர்த்தி பண்டிக்கைக்காக சாலையோரம் போடப்பட்டு இருந்த சீரியல் லைட் வயர் … Read more

இணையத்தில் முன்பதிவு செய்தால் இருவழி பயணச்சீட்டுக்கு 10 சதவீதம் சலுகை: விரைவு போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை: இணையம் மூலம் இருவழிப் பயணச்சீட்டை முன்பதிவு செய்வோருக்கு, திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படுவதாக விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது. விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் அதிநவீன மிதவைப்பேருந்து, குளிர்சாதனப் பேருந்து, குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து, கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்துகள் என 1,082 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கும் சேர்ந்து, மொத்தம் … Read more

வரத்து அதிகரிப்பால் சரிந்து வரும் பாமாயில் விலை; எள் வரத்து குறைவால் நல்லெண்ணெய் விலை உயர்வு

விருதுநகர்:  கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக, இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் வரத்து குறைந்தது. இதனால், அதன் விலை கடுமையாக உயர்ந்தது. 2019, டிசம்பரில் 15 கிலோ பாமாயில் டின் ரூ.1,200க்கும் குறைவாக இருந்தது. கொரோனாவால் படிப்படியாக விலை உயர்ந்து, கடந்த மே மாதம் 15 கிலோ டின் பாமாயில் ரூ.2,560க்கு விற்பனையானது. தற்போது இந்தோனேசியாவில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், பாமாயில் விலை குறைந்து வருகிறது. கடந்த ஜூலையில் பாமாயில் டின் திடீரென ரூ.250 விலை குறைந்தது. மேலும், … Read more