தேனி அருகே பாஜக மாநில மேம்பாட்டு பிரிவு செயலாளர் கார் கண்ணாடி உடைப்பு

தேனி: தேனி சின்னமனூர் பாஜக மாநில மேம்பாட்டு பிரிவு செயலாளர் பிரபாகரனுக்கு சொந்தமான ஸ்கார்பியோ காரின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தூத்துக்குடி: பாஜக பிரமுகரின் ஆம்னி பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு.!

தூத்துக்குடியை சேர்ந்த பாஜக பிரமுகரின் ஆம்னி பேருந்து மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு அதிர்ஷ்டவசமாக பஸ்ஸின் மீது படாமல் தரையில் விழுந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவர் விவேகம் ரமேஷ். இவர் விவேகம் டிராவல்ஸ் என்ற பெயரில் தூத்துக்குடியில் இருந்து சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவரது ஆம்னி பஸ் இன்று இரவு திருச்செந்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோயம்புத்தூருக்கு புறப்பட்டது. அப்போது பஸ் … Read more

யூ-டியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு.. 17 வயது சிறுவன் கைது..!

தாய் குறித்து தவறாக பேசிய நண்பனை மிரட்ட யூ-டியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, லாஸ்பேட்டை பாரதிதாசன் வீதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (50). சண்டே மார்க்கெட் வியாபாரியன இவருக்கு, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி இவருடைய வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதுகுறித்து லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பரமசிவத்தின் … Read more

சட்டத்தை தங்கள் கையில் எடுத்ததால் பாஜகவினர் கைது: அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து

கோவையில் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டதால் தான் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். உலக பிசியோ தெரபி தினத்தையொட்டி தமிழ்நாடு பிசியோ தெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் கோவையில் நேற்று நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் பாஜகவினர் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டதால் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கான கோரிக்கைகள் இருந்தால் மாவட்டஆட்சியர் அல்லது காவல் துறை அதிகாரிகளிடம் முன்வைக்கலாம். … Read more

அமைச்சரவைக் கூட்டம்: என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன?

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்டோபர் மாதம் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டமன்றத்தை கூட்டும் தேதி தொடர்பாக சபாநாயகருக்கு பரிந்துரை செய்யப்படும், அதன்பின்னர் சபாநாயகர் சட்டப் பேரவை கூடும் தேதியை அறிவிப்பார். ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் … Read more

மகளை அடித்த மருமகனை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனார்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன் (47). இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த உருவாட்டி (75) என்பவரின் மகள் காளீஸ்வரி (39) என்பவருக்கும் திருமணமாகி, இவர்களுக்கு 19 வயது மகன் மற்றும் 16 வயது மகள் ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். உதயசூரியன் மதுபோதையில் தனது மனைவியுடன் சண்டையிட்டு காளீஸ்வரியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை உதயசூரியன் மது போதையில் தனது மனைவி காளீஸ்வரியை அடித்துள்ளார். … Read more

பவானிசாகர் அணை கரையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் – வனத்துறை எச்சரிக்கை

பவானிசாகர் அணையின் கரையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுப்பணித் துறை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். பவானிசாகர் அணை நீர் தேக்கப் பகுதியை ஒட்டி பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனத்தையொட்டியுள்ள பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதிக்கு யானைகள் நீர் அருந்த வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் பவானிசாகர் அணைக்கரையில் வளர்ந்துள்ள புற்களை உண்ண குட்டிகளுடன் வந்தன. இதையடுத்து அங்கு செழித்து வளர்ந்த புற்களை உண்டபடி அங்கேயே … Read more

காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்

காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் உள்ள பாஜக அமைப்பு சாரா பிரிவின் தெற்கு மாவட்ட செயலாளர் பொன்ராஜ் வீட்டுக்கு நேற்றிரவு வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட பொன்ராஜின் காரை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும். என்ஐஏ சோதனை என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. இந்த … Read more

எச்.ராஜாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வார்னிங்!

விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு மணி விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கட்சி நிதியாக விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் உறுப்பினர்கள் 533 கிராம் தங்க நகைகளை வழங்கினார். விழாவில் எம்.பி பேசியதாவது: “அக்டோபர் 2-ம் தேதி காந்தியடிகளின் பிறந்தநாள் அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இதுவரை எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை … Read more

கோவையில் அமைதியை நிலைநாட்ட ‘அமைதிக் குழு’ : புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி

கோவை மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட ‘அமைதிக் குழு’ நியமிப்பது குறித்து தமிழக தலைமைச் செயலர், உள்துறைச் செயலாளர், தமிழக காவல்துறைத் தலைவர், கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகர காவல் துறை ஆணையாளர், மேற்கு மண்டல ஐஜி ஆகியோருக்கு தனித்தனியே எழுதப்பட்ட கடிதங்களின் சாராம்சம்: கோவை மாநகரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக நடந்து வரும் சம்பவங்கள் மிகவும் கவலை அளிக்கக் கூடியதாகும். கோவை மாவட்டம் சென்னைக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான தொழில் … Read more