தாமதமாக சான்றிதழ் சமர்ப்பித்ததற்காக பணி நியமனத்தை மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தாமதமாக சான்றிதழ் சமர்ப்பித்ததற்காக பணி நியமனத்தை மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், திருப்பூரைச் சேர்ந்த கலப்பு மணம் புரிந்தவருக்கு, அந்த முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் 4 வாரங்களில் பணிநியமனம் வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை பள்ளிக்கல்வித் துறை 2015-ம் ஆண்டு மேற்கொண்டது. வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடிப்படையிலும், நேரடியாகவும் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும், நேரடியாகவும் பங்கேற்ற … Read more