ஆசிரியர்களின் கவலைகள் களையப்பட வேண்டும்: ராமதாஸ்

ஆசிரியர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கும் வகையில் அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் தான் அவர்களால் மிகச்சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும் என்று கூறியுள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதை தெரிவித்துள்ளார். அதில், “ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றத்திற்கும் காரணமாகத் திகழும் ஆசிரியர்கள் நாளை கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை … Read more

உச்சநீதிமன்ற வழக்கில் வெற்றி பெற இபிஎஸ் ஆதரவாளர்கள் சிறப்பு வழிபாடு!

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யும் நிலையில் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் ஆலயத்தில் இபிஎஸ் ஆதரவு அதிமுகவினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.  செப்டம்பர் மாதம் 2-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு செல்லும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார்.   இந்நிலையில் உயர் நீதிமன்ற … Read more

கோவையில் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவை ரத்து

கோவை: கோவையில் மழை காரணமாக மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஹில்கிரோ ஆடர்லி ரயில் நிலையம் இடையே ஏற்பட்ட மண்சரிவை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமடைந்துள்ளனர்.   

திருப்பதி தேவஸ்தான சேவை குறைபாடு: சேலம் பக்தருக்கு ரூ.45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

திருப்பதி தேவஸ்தான சேவை குறைபாடு தொடர்பாக சேலத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் ரூபாய் 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த ஹரி பாஸ்கர் என்பவர் திருப்பதி தேவஸ்தானத்தில் மேல் சாந்து வாஸ்திர சேவை தரிசனத்திற்காக ரூபாய் 12,250 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு செலுத்திய இந்த கட்டணத்தின் அடிப்படையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதி … Read more

தாம்பரம், ஐடி காரிடர், எண்ணூர், மாதவரம் பகுதிகளில் இன்று மின்தடை

சென்னையில் இன்று (செப்.5) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், ஐடி காரிடர், எண்ணூர், மாதவரம் ஆகிய பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். தாம்பரம் பகுதி:  ராஜகீழ்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெரு, கனகராஜ் தெரு, ஆலவட்டம்மன் கோயில் தெரு, மாடம்பாக்கம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து … Read more

உணவகத்துக்குள் புகுந்த அரசு பேருந்து.. இருவர் பலி, ஏழு பேர் படுகாயம்..!

ஹோட்டலுக்குள் அரசு பேருந்து உகுந்தததகல் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், நத்தத்தில் இருந்து மதுரைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கோவில்பட்டி புளிக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஹோட்டலுக்குள் மோதியது. ஹோட்டலில் விநாயகர் ஊர்வலம் பார்க்க நின்ற பொதுமக்கள் மீது பேருந்து மோதியது. இதில தேவராஜ், பாண்டி என்ற இரண்டு முதியவர்கள் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், … Read more

ரம்மி விளம்பரத்தில் நடித்தது ஏன்? – நடிகர் சரத்குமார் கருத்து

சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும்நடிகருமான சரத்குமார் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: ஆன்லைன் ரம்மி தவறு என்றால் அரசு தடை செய்யட்டும். அரசு தடை செய்தால், ஏன் விளம்பரங்களில் நடிக்க வேண்டி வருகிறது? குடிப்பழக்கம் குடியைக் கெடுக்கும் என்பதால், குடிக்காமல் இருக்கிறார்களா? புகைப்பழக்கம் உடல்நலத்துக்கு கேடு எனும்போது, தயாரிப்பதை ஏன் நிறுத்தவில்லை? அதுபோல, இணையத்தில் நல்லவற்றை எடுத்துக்கொள்ளுங்கள், தீயவற்றை விட்டுவிடுங்கள். நாம் சுயகட்டுப்பாட்டுடன் இருந்தால், அவர்கள் கடையை மூடிவிட்டு போய்விடுவார்கள். அதை விட்டுவிட்டு, நான் ரம்மி விளம்பரத்தில் … Read more

திருப்பத்தூர்: பிறந்து 40 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பிறந்து 40 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் உமாபதி. இவரது மனைவி நதியா. இவர்களுக்கு ரித்திகா என்ற 7 வயது மகளும், பிறந்து 40 நாட்களே ஆன மற்றொரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்ததால் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த … Read more

கோவையில் 56 கிராம ஊராட்சிகளில் இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் திட்டம்

வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 56 கிராம ஊராட்சிகளில் இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.சித்ராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: கோவை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் திட்டம் நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் கீழ்வரும் 56 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட … Read more

மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

மதுரை: மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, ராஜபாளையம் – சங்கரன்கோவில் இடையே ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – செங்கோட்டை (06663) மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை – மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை முழுமையாக ரத்து … Read more