இலவசங்கள் குறித்து கவலைப்படுவோர் வங்கி வாராக் கடன் தள்ளுபடி பற்றி கவலைப்படாதது ஏன்?

இவவச கவசம்: அரசியல் கட்சிகள் என்னதான் வளர்ச்சி திட்டங்கள் பற்றி பேசினாலும் தேர்தல் போரில் மக்கள் மனங்களை வெல்ல அவை இலவச அறிவிப்புகளையே கவசங்களாக கைக்கொள்கின்றன. அது…கருணாநிதி ஆட்சி காலத்தி்ல் செயல்படுத்தப்பட்ட இலவச டிவி வழங்கும் திட்டமாக இருந்தாலும் சரி… ஜெயலலிதா ஆட்சியில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டராக இருந்தாலும் சரி… கருணாநிதி கோடி போட்டால், ஜெயலலிதா ரோடு போடும் அளவுக்கு இலவசங்களை மக்களுக்கு வாரி வழங்கினார். கருணாநிதியின் வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் … Read more

குடியாத்தம் இளைஞருக்கு விருது: 7000 மரங்கள் நட்டு குருங்காடு வளர்த்தவருக்கு முதல்வர் பாராட்டு

வேலூர் மாவட்டம் பாலாற்றங்கரையில் 25 ஏக்கரில் 7000 மரங்களை நட்டு குருங்காடு வளர்த்து வரும் இளைஞருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சிறந்த இளைஞருக்கான விருதை வழங்கினார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஸ்ரீகாந்த். இவருக்கு வயது 33. பி.சி.ஏ பட்டப்படிப்பு முடித்தவுடன் இவர் சென்னையில் சினிமா இயக்குனராகும் கனவுடன் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.  இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக ஸ்ரீகாந்த் சொந்த … Read more

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் 2 விசைப்படகுகள் கவிழ்ந்தது: 10 மீனவர்கள் தப்பினர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் செழியன், சுரேந்தர் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகில் 10 பேர் நேற்று அதிகாலை மீன் பிடிக்க சென்றனர். இதில் ஒரு படகில் 5 பேர் வீதம் 2 படகுகளிலும் 10 பேர் இருந்தனர். மீன்களை பிடித்து கொண்டு பழையாறு துறைமுகத்துக்கு திரும்பி வந்தனர். கொள்ளிடம் ஆறு கடலில் சங்கமிக்கும் இடமான முகத்துவாரத்தின் வழியாக வந்தபோது அங்கு மண் மேடாகியிருந்ததால் தரைதட்டி மண் குவியலில் மோதி … Read more

சுதந்திரம் முதல் இன்று வரை.. 4000 தபால் தலைகளை சேகரித்துள்ள ஆசிரியருக்கு ஆட்சியர் பாராட்டு

சுதந்திரம் கிடைத்ததில் இருந்து இன்று வரை வெளியிடப்பட்டுள்ள 4,000 தபால் தலைகளை சேகரித்து வைத்திருக்கிறார் விழுப்புரம் பள்ளி ஆசிரியர் ஒருவர். மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆர்வத்தை தூண்டவும் நீண்ட நாட்களாக இந்த பணியை செய்து வருவதாக பெருமிதம் கொள்கிறார் அவர். தகவல் பரிமாற்றம் என்று சொன்னாலே அது கடிதப் போக்குவரத்தாக இருந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது அது எங்கே என்று தேடும் நிலைக்கு வந்துவிட்டோம். இப்படி கடிதப் போக்குவரத்து இருந்த காலங்களில் கடிதங்களை கொண்டு செல்ல அரசாங்கத்திற்கு ஒரு தொகை … Read more

4-வது நாளாக தேடுதல் வேட்டை… ட்ரோன் உதவி… காயமடைந்த காட்டு யானையை பிடிக்க தீவிரம்

கோவை மாவட்டம் ஊக்கையனூர் பகுதியில் நான்காவது நாளாக வனத்துறை அதிகாரிகள் வன பகுதியை மேப் கொண்டு ஆலோசனை செய்தும், ட்ரோன் கேமரா மூலம் காட்டு யானையை தேடி வருகின்றனர் தமிழக கேரள எல்லை பகுதியான கொடுங்கரை பகுதியில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  வாயில் காயத்துடன் காணப்பட்டது  இதனை அடுத்து கோவை மண்டல தலைமை வன பாதுகாவலர் ராமசப்பிரமணியன் தலைமையில் 7 குழுக்களும் கேரள வனத்துறை சார்பில் 4 … Read more

அலுவலகத்திற்குள் புகுந்து பைனான்சியரை வெட்டி படுகொலை செய்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

வேளாங்கண்ணியில் அலுவலகத்திற்குள் புகுந்து பைனான்சியரை வெட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மனோகர் என்ற அந்த பைனான்சியர், இரவு அலுவகத்தில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது 4 இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கும்பல் உள்ளே புகுந்து மனோகரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தடுக்க முயன்ற அவரது நண்பரின் கையிலும் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது.     Source link

“நீங்கள் பேசுவது அபத்தத்தின் உச்சம்” – தென் கொரிய அதிபரை விமர்சித்த கிம்மின் சகோதரி

பியாங்யாங்: “நீங்கள் பேசுவது அபத்தத்தின் உச்சம்” என்று தென் கொரிய அதிபரை கிம்மின் சகோதரி கடுமையாக விமர்சித்துள்ளார். “வடகொரியா அணு ஆயுத சோதனைகளை கைவிட்டால் நாங்கள் பொருளாதார உதவிகளை செய்யத் தயார்” என தென் கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தென் கொரியாவின் கருத்தினை கிம்மின் சகோதரியும், வட கொரியாவின் சக்தி வாய்ந்த பதவியில் இருப்பவருமான கிம் யோ ஜாங் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தென்கொரிய அதிபரின் இந்த அழைப்பு … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கையை வெளியிடுக! – திமுக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக் குழு 3,000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை 2022 மே … Read more

சிகரெட்டுக்கு பணம் பணம் வேணுமா? கடைக்காரர் காதை கடித்த காவலர்….!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கதவு இல்லாததால் இரவு நேரத்தில் தார்பாலினால் கதவை மூடி வைத்துவிட்டு கடைக்குள்ளேயே உறங்குவது வழக்கம். இதேபோன்று கடையில் செந்தில்குமாரின் மகன் செல்வசிவா தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணி அளவில் தார்பாலினை திறந்து உள்ளே வந்த சிவகங்கை மாவட்டம் கீதக்காதியைச் சேர்ந்த போலீஸாக்காரரான முகமது ஆஷிக்  என்பவர் … Read more

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா 22ல் துவக்கம்: 31ம் தேதி தீர்த்தவாரி உற்சவம்

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழா வரும் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இக்கோயிலில் வரும் 22ம் தேதி காலை கொடியேற்றத்துடன் சதுர்த்தி பெருவிழா துவங்குகிறது. அன்று இரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 2ம் நாள் முதல் 8ம் … Read more