புதுச்சேரியில் நம்ம பாண்டி கிளீன் திட்டம் அறிமுகம்

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, பாண்டிச்சேரி நகராட்சி மற்றும் ஸ்வச்தா கார்ப்பரேஷன் இணைந்து, நம்ம பாண்டி கிளீன் திட்டத்தின் மூலம்  தொடர் சிறப்பு முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் , கோத்ரேஜ் நுகர்வோர் தயாரிப்புகள் லிமிடெட் பெருநிறுவன  சமூகப் பொறுப்பின் (CSR)  நிதியின் ஒரு பகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடபட்டுள்ளது . பொது இடங்களில் குப்பைகளை கொட்டாமல் இருத்தல் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வை நகரம் முழுவதும் ஏற்படுத்தப்படும் … Read more

எச்சரிக்கை இங்கு இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி என்ற அறிவிப்பு பலகையால் பரபரப்பு.!

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே இந்துக்கள் வாழும் பகுதியில் மதப்பிரச்சாரம், மதக் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மதம் சார்ந்த பாகுபாடு அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் மிக அதிகம் என்றாலும் தமிழ்நாட்டில் சற்றே ஆரம்பிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கோவை அருகே வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே காடுவெட்டிபாளையம் என்ற கிராமத்தின் நுழைவு வாயிலில், … Read more

அரசு பேருந்துகளின் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகளை எச்சரித்த போலீசார்.!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடராம் பகுதியில் அரசு பேருந்துகளின் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவிகளை போலீசார் எச்சரித்தனர். கோவில்பட்டியில் இருந்து புதியம்புத்தூர் வரை செல்லும் அரசு பேருந்துகளில் செல்லும் மாணவர்கள் படியில் தொங்கியடி பயணம் செய்வதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார் பேருந்தில் படியில் தொங்கியபடி வந்தவர்களை எச்சரித்தனர். படியில் தொங்கியபடி பயணிப்பதால் ஏற்படும் ஆபத்தை எடுத்துக்கூறிய போலீசார், மீண்டும் அவ்வாறு பயணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.   … Read more

கிருஷ்ண ஜெயந்தி: ஆளுநர் வாழ்த்து

சென்னை: “அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்திய நாட்டை ஒரு முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுகின்ற பணியில் நம் நாடு அடியெடுத்து வைத்திருக்கும் இந்தப் பொற்காலத்தில், அறவாழ்விற்கான ஒரு வழியாக, முழுமையாகவும், மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் நமது கடமையை மேற்கொள்ள வேண்டும்” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: “ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில், தமிழ்நாடு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பகவான் கிருஷ்ணர், பல்வேறு அவதாரங்களாலும் வாழ்க்கை … Read more

ட்ரீட்மெண்ட் முடிஞ்சுதா? இல்லையா? சேலத்தில் விடாத போலீஸ்- கதறிய கே.பி.ராமலிங்கம்!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டப வளாகத்தில் பாரத மாதா ஆலயம் அமைந்துள்ளது. இங்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் சென்றுள்ளனர். அப்போது ஆலயம் பூட்டு போட்டு மூடப்பட்டிருந்தது. இதையடுத்து பூட்டை உடைத்து பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தனர். இதுதொடர்பாக மண்டப காப்பாளர் சரவணன் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கே.பி.ராமலிங்கம், மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட … Read more

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி 5ஆம் ஆண்டு மாணவி தற்கொலை

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி பயின்று வநத ஐந்தாம் ஆண்டு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் காயத்ரி இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பு ஐந்தாம் ஆண்டு ஹவுஸ் சர்ஜன் படித்து வருகிறார். மருத்துவக் கல்லூரியில் பெண்களுக்கான தங்கும் விடுதியில் தனி அறையில் தங்கி படித்து வந்துள்ளார் காயத்ரி. ஆகஸ்ட் 17ம் தேதியன்று (புதன்கிழமை) காயத்ரி அறையை விட்டு வெளியே … Read more

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு

தென்காசி: கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் செப்டம்பர் 2- தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பச்சேரி கிராமத்தில் 20-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ள ஒண்டிவீரன் 251-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டம்பர் 1-ம் தேதி நெற்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும் மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் … Read more

சிறுமி கருமுட்டை விற்கப்பட்ட விவகாரம்: தாய் உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது!

சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் தாய் உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சிறையிலிருக்கும் 4 பேருக்கு உத்தரவு நகல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்ட விவகாரம் பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு தெற்கு காவல் நிலையதில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அச்சிறுமியின் தாய் இந்திராணி, இரண்டாவது கணவர் சையத் அலி, இடைத்தரகர் மாலதி மற்றும் … Read more

புரோட்டீன் ரொம்ப முக்கியம்: சுகர் பேஷன்ட்ஸ் இந்த உணவுகளை தேடிச் சாப்பிடுங்க!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் எப்படி குறைப்பது என்றுதான் யோசிக்கிறார்கள். இதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற சத்துகளை நாம் சாப்பிட வேண்டும் என்பதற்கு அவர்கள் கொடுப்பதில்லை. இதில் முக்கியமான புரோட்டீன் நிறைந்த உணவுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.  நமது தசைகளில்தான் எல்லா புரோட்டீன்களும் இருக்கிறது. புரோட்டீன்களை உடைத்து, அதை குளுக்கோஸாக மாற்றி அதில் கிடைக்கும் ஆற்றலை உடல் சக்தியாக பயன்படுத்துக்கொள்கிறது. இந்தியா ஒரு கார்போஹைட்ரேட் உணவுகளை விரும்பும் நாடாக இருக்கிறது. ஐசிஎம்ஆர் அறிவுரைப்படி நாம் … Read more