வசூல் ராஜா பாணியில் ஆள்மாறாட்டம் செய்த பாஜக நிர்வாகி.. கம்பி எண்ண வைத்த திருவாரூர் போலீஸ்!

ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் பாஸ்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவராக இருப்பவர் பாஸ்கர். இவர் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் இளங்கலை அரசியல் பிரிவில் படித்து வருகிறார். மூன்று ஆண்டுகள் கொண்ட இந்த படிப்பில் இறுதி ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வில் … Read more

சுதந்திர தினம் 2022: மனதை கவரும் வாட்ஸ் ஆப் வாழ்த்துகள்: தேசப்பற்றை கொண்டாடுவோம்  

சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலை 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதியில்தான் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியாவிற்கு சுதந்திர வீரர்களால் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. நாம் எந்த மதத்தை, மொழியை சேர்ந்தவர்களாக இருந்தாலும். நாம் இந்தியர்கள் என்றுதான் பெருமை கொள்வோம். எல்லா ஆண்டுகளும் சுதந்திர தினத்தை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடுவோம். இந்த ஆண்டு கொரோனா கட்டுபாடுகளால் நாம் … Read more

பெண்கள் ஒரே பட்டத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், மேலும் படிக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை.!

சென்னை கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணமாக ரூ.10 ஆயிரம் மற்றும் புத்தகப் பைகளை வழங்கி உள்ளார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “தமிழகம் முழுவதும் நான் சுற்றிச் சுழன்று பணியாற்றி வந்தாலும், என்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது, நான் என்னை அறியாமல் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, … Read more

'தமிழ்நாட்டில் வன்முறை அரசியல் வெறியாட்டத்தை நுழைக்க பாஜக முயற்சி' – சீமான் கண்டனம்

சென்னை: “தமிழ்நாடு நிதியமைச்சரை வழிமறித்து காலணி வீசியதன் மூலம் நிதியமைச்சரையும், தமிழ்நாடு அரசையும் மட்டும் பாஜக அவமதிக்கவில்லை. நாட்டிற்காக உயிர்நீத்த வீரரின் தியாகத்தையும் அற்ப அரசியலுக்காக பாஜக கொச்சைப்படுத்தி விட்டது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை குறிவைத்து காலணி வீசியுள்ள பாஜகவினரின் அநாகரிகச்செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வட மாநிலங்களில் காலங்காலமாக கடைபிடித்துவரும் வன்முறை அரசியல் வெறியாட்டத்தை தமிழ்நாட்டிலும் மெல்ல மெல்ல … Read more

ஊழல் லிஸ்டில் அடுத்த அமைச்சர்… பகீர் கிளப்பிய அண்ணாமலை!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் சிறை செல்வது உறுதி. ஏனெனில் மின்சாரத்துறை, மதுவிலக்கு துறை என பல்வேறு அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டை நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அண்ணன் நாசரை பொறுத்தவரை வாயைத் திறந்து அவரே ஊழல் குற்றசாட்டை சொல்லி விடுவார். நாமே வேண்டாம் என்று நினைத்தாலும் புதிது, புதிதாக ஊழல் குற்றச்சாட்டுகளை அவரே தேடித் தேடி … Read more

வானிலை தகவல்: எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாடு வானிலை தகவல்: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 14 ஆம் தேதி 2022 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். … Read more

ஆளுநருடன் ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை ஆனால்… திருநாவுக்கரசர் எம்பி

பி.டி.ஆர் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்கு பொறுப்பேற்று அண்ணாமலை பதவி விலக வேண்டும் என திருநாவுக்கரசர் எம்பி தெரிவித்தார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை நினைவு கூறும் வகையில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில், திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். இதையடுத்து வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்… ”இந்த பாதயாத்திரை சுதந்திர போராட்ட தியாகிகளை … Read more

கடன் சுமையால் கேரள அரசு பேருந்து போக்குவரத்து குறைப்பு; தமிழக- கேரள பயணிகள் அவதி

Tamilnadu – Kerala bus transportation issues in kovai: வருமானத்தை விட டீசல் செலவு அதிகமானதால் கேரளா போக்குவரத்து கழகம் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்ததால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையும் படியுங்கள்: ”சிண்ட்ரெல்லாவின் ஒத்த செருப்பு எங்களிடம் இருக்கிறது”: பழனிவேல் தியாகராஜன் ட்வீட் போக்குவரத்துக் கழகத்தின் சராசரி தினசரி வருவாய் விட டீசல் … Read more

செங்கல்பட்டு | சாலையோரத்தில் நடமாடிய ஒட்டகம் – வனத்துறை மீட்பு.! 

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையோரம் காலி இடத்தில் மிகவும் உடல் மெலிந்த நிலையில் ஒரு ஒட்டகம் சுற்றிக்கொண்டிருந்தது.  இதை கண்ட பொதுமக்கள், கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார், வண்டலூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  இதனையடுத்து, மெலிந்த நிலையில் காணப்பட்ட ஒட்டகத்தை மீட்ட வனத்துறையினர், வண்டலூர் பூங்காவின் பாதுகாப்பில் வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.  மேலும், அந்த ஒட்டகம்  திடீரென இங்கு எப்படி வந்தது? யாராவது ஒட்டகத்தை இரவு நேரத்தில் … Read more

பாஜகவினர் நடந்துகொண்ட விதம் வேதனை அளிக்கிறது: ஆர்.பி.உதயகுமார்

மதுரை: மதுரையில் பாஜக தொண்டர்கள் நடந்துகொண்ட விதம் வேதனை அளிக்கிறது என்று அதிமுக எம்எல்ஏ.வும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” நேற்று விமான நிலையத்திற்கு வெளியே இருந்த பாஜக தொண்டர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில், அவர்களது உணர்ச்சியை வெளிக்காட்டும் விதமாக ஒரு விரும்பத்தகாத நிகழ்வை நடத்தினர். இது அனைவருக்கும் வேதனை அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வு. ஏனென்றால், பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், உபசரிப்பு, … Read more