பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை கைது..!

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், விருபாட்சிபுரம்  பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி இவரை விட்டு பிரிந்த நிலையில் அவர் அவரது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது மகள் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர், அவருக்கு அரசு மருத்துவமனையில் அவருக்கு குழந்தை பிறந்தது. சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் சமூகநலத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.அவர்கள் நடத்திய விசாரணையில் சிறுமியை அவரது தந்தையே பாலியல் … Read more

செஸ் ஒலிம்பியாட் சுவாரஸ்யம் : பார்வையாளராக வந்து கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய 7 வயது சிறுமி!

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. போட்டியை நடத்தும் வாய்ப்பு தமிழகத்திற்கு கிடைத்தது. குறைந்த நாட்களில் தமிழக அரசு போட்டிக்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்தது. பிரதமர் மோடி போட்டியை தொடங்கி வைத்தார். 188 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். உலக சாம்பியன் உள்பட கிராண்ட் மாஸ்டர்கள், முன்னணி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். … Read more

திருச்சி | காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு கோலாகலம்

திருச்சி/சேலம்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரியாற்றின் படித்துறைகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரைகளில் ஏராளமான பொதுமக்கள் நேற்று ஆடிப்பெருக்கு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதம் என்பதால், மாதம் முழுவதுமே அம்மன் கோயில்களில் உற்சவங்கள் நடைபெறும். அந்த வகையில் ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, இந்த விழா காவிரி ஆறு பாயும் பகுதிகளில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு … Read more

"உடலை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பொய்யானவை”-கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் பேட்டி

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மரணமடைந்த நிகழ்வு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், `மாணவி உடல் தூக்கி செல்லப்படும் காட்சி’ என்று ஒரு சிசிடிவி காட்சி வெளியாகியது. இந்த சிசிடிவி-யில் வெளியான காட்சிகள் பொய்யானவை என்று அவரது தாய் செல்வி விளக்கம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் பயின்று வந்த கடலூர் கனியாமூர் பகுதியைச் சேர்ந்த மாணவி கடந்த மாதம் 13 ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்தார். மாணவியின் … Read more

Tamil news today live: தொடர் மழை பள்ளிகளுக்கு விடுமுறை

Go to Live Updates பெட்ரோல் – டீசல் விலை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மழை நிலவரம் வால்பாறை, தேனி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் கனழமையால் பள்ளிகளுகு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.   காமன்வெல்த்- இந்தியா வெற்றி காமன்வெல்த் – ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷல் வெண்கலம் வென்றார்.  ஜூடோவில் இந்தியாவின் துலிகா மான் … Read more

சென்னை || வடமாநில கட்டிட தொழிலாளி கொலை, காவல்துறையினர் தீவிர விசாரணை..!

வடமாநில தொழிலாளி கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை தண்டையார்பேட்டை புதிய வைத்தியநாதன் தெருவில் வடமாநில பலர் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இங்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுர்பாத் சர்தார் என்பவரும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று சுர்பாத் சர்தார்  வெட்டப்பட்ட  நிலையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு … Read more

ஈரோடு | பாடப்புத்தகங்களில் தீரன் சின்னமலை வரலாறு: ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்

ஈரோடு: ஆங்கிலேயரை தோற்கடித்த தீரன் சின்னமலையின் ஆளுமை குறித்து பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார். கொங்கு சமூக ஆன்மிக கல்விகலாச்சார அறக்கட்டளை, தீரன் சின்னமலை கூட்டமைப்பு சார்பில், ஈரோடு மாவட்டம் ஜெயராமபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217-வது நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராக விளங்கிய தீரன் சின்னமலையின் வரலாற்றை அழிக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தனர். … Read more

பெரியார் சிலை குறித்த பேச்சு: இன்று கைதாகிறார் ஸ்டண்ட் மாஸ்டர் கணல் கண்ணன்?

திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டரும், இந்து முன்னணி அமைப்பின் மாநில கலை மற்றும் பண்பாட்டு பிரிவு தலைவருமான கணல் கண்ணன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக கணல் கண்ணன், மதுரவாயலில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் `ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை இடிக்க வேண்டும்’ என பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. இதையடுத்து தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில்  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் … Read more

தேங்காய் ஈஸியா உடைக்க வழி இருக்கு… ஒரு முறை இப்படி ட்ரை பண்ணுங்க!

Coconut health benefits in tamil: நம்முடைய ஊர்களில் பரவலாக கிடைக்கும் உணவுப்பொருட்களில் ஒன்றாக தேங்காய் உள்ளது. இவற்றில் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்புகளும், பூஞ்சைகளை எதிர்க்கும் ஆற்றலும் அதிகமாக இருக்கிறது. இதனால் இவை நம்முடைய உடலுக்கு பேருதவியாக உள்ளது. தேங்காயில் மிகுந்து காணப்படும் நார்ச்சத்து மலச்சிக்கலை போக்க உதவுகிறது. தேங்காயில் உள்ள நல்ல கொழுப்பு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. அதோடு கொழுப்பு அளவையும் சீராக பராமரிக்க உதவுகிறது. இதனால் இதய பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக … Read more

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் நேரடி கலந்தாய்வு – கல்லூரிக் கல்வி இயக்ககம்.!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நேரடி கலந்தாய்வு நாளை (ஆகஸ்ட் 5 தேதி) முதல் ஆரம்பமாக உள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 2022- 23ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் மேற்கொள்ளப்பட்டது. இதில், 4.07 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக 70 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான நேரடி … Read more