கள்ளக்குறிச்சி: மாணவியின் ஜிப்மர் மருத்துவ அறிக்கையை வழங்க நீதிமன்றம் மறுப்பு… ஏன்?
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக ஜிப்மர் மருத்துவ அறிக்கையை மாணவி தரப்பு வழக்கறிஞர்களிடம் தர விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக, மருத்துவ அறிக்கைகள் மற்றும் ஆய்வறிக்கையை கேட்டு மாணவி தரப்பு வழக்கறிஞர்கள் விழுப்புரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இரண்டாவது பிரேதப் பரிசோதனையை அறிக்கையை மட்டும் அவர்களிடம் வழங்கினார். மேலும் … Read more