கேரளாவில் விற்பதற்காக கடத்திச்செல்லப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீரான ஆம்பர் கிரீஸ் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கேரளாவில் விற்பதற்காக கடத்திச்செல்லப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீரான ஆம்பர் கிரீஸை போலீசார் பறிமுதல் செய்தனர். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் வலையில் சிக்கிய ஆம்பர் கிரீஸை மீனவர்கள் சிலர் விற்பனைக்கு முயற்சி செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. குளச்சல் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரில் வந்த 5 பேரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் காரில் ஆம்பர் கிரீஸை … Read more

“மூத்த மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன்” – காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் தந்தை

திருமங்கலம்: காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவ முகாமில் நேற்று காலை தீவிரவாத தாக்குதல் நடந்தது. அப்போது, இந்திய ராணுவத்தினர் எதிர்தாக்குதல் நடத்தியபோது, இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேரும், தீவிரவாதிகள் 2 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. இந்திய வீரர்கள் 3 பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர், மதுரை மாவட்டம், திருமங்கலம்- உசிலம்பட்டி செல்லும் … Read more

“கண்ணாமூச்சி ஆடிவிட்டீர்கள்”.. சேகர் ரெட்டி வழக்கில் வருமான வரித்துறையை சாடிய நீதிமன்றம்!

4 ஆண்டுகளுக்கு 2,682 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும்படி, சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்திற்கு வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ். மைனிங் என்ற நிறுவனம், கடந்த 2014-15 முதல் 2017-18ம் மதிப்பீட்டு ஆண்டுகளில் 384 கோடியே 55 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதாக கூறி வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தது. கடந்த 2016ம் ஆண்டு சேகர்ரெட்டியின் … Read more

பைக்கில் சென்ற போது தாய் மடியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது தாய் மடியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குணா- முத்தமிழ் தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி, திருவள்ளூர் அடுத்த கேஜி கண்டிகையில் உள்ள பள்ளியில் குரூப் 4 தேர்வு எழுதிய முத்தமிழ், கணவர் மற்றும் குழந்தைகளுடன் பைக்கில் … Read more

தமிழகத்தில் பிஹார் போல் மாற்றம் வரலாம்: புதுச்சேரி பாஜக தலைவர் கணிப்பு  

புதுச்சேரி: நமது நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி பாஜக சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரத மாதா உருவசிலை ரத ஊர்வலம் புதுச்சேரி மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது. பாரத மாதா சிலையை பொதுமக்களும், மாணவர்களும் தரிசிக்கும் வண்ணம், அனைத்து தொகுதிகளுக்கும் ஊர்வலமாக செல்வதற்கான தொடக்க நிகழ்ச்சி காலாப்பட்டு அருகே கனகசெட்டிக்குளத்தில் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பாரத … Read more

”ஆன்லைன் ரம்மி விளம்பரம்.. நடிகர்களாகவே பார்த்து திருந்த வேண்டும்” – தமிழக சட்ட அமைச்சர்!

ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தான் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது என்றும், இதை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேலி செய்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதி … Read more

இலங்கை நெருக்கடிக்கு உதவி; பரிசு தொகையை நன்கொடையாக வழங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

Australia men’s cricket team donate tour prize money to assist Sri Lanka in economic crisis: ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணி வீரர்கள், சமீபத்திய இலங்கை சுற்றுப்பயணத்தின் பரிசுத் தொகையை உள்ளூர் மக்களுக்கு ஆதரவளிக்க நன்கொடையாக அளித்துள்ளனர் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஜூலை 11 வியாழன் அன்று தெரிவித்துள்ளது. “இலங்கை நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவாக, எங்கள் ஆஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணி, சமீபத்திய … Read more

#BigBreaking: ஸ்ரீமதியின் தாயிடம் போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின்.. தாய் செல்வி கேட்ட அந்த ஒரு விஷயம்.!

கள்ளக்குறிச்சி கணியமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து CBCID விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை அடித்து உடைத்து பலர் … Read more

“பிரதமர் என்றும் பாராமல் தொந்தரவு” – மோடியின் 'கருப்பு' கருத்துக்கு தமிழக அரசியல்வாதிகளின் ரியாக்‌ஷன்

சென்னை: கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி ஒரு ட்வீட் பகிர்ந்திருந்தார். அதில் காங்கிரஸ் கட்சியைக் குறிப்பிடாமல், “சிலர் ஆகஸ்ட் 5ஆம் தேதி பில்லி, … Read more

கோவை: ஆய்வின்போது வெடித்த எரிவாயு குழாய்! ஆள் உயரத்திற்கு தூக்கி வீசப்பட்ட கற்கள்! வீடியோ

கோவை சேரன்மாநகர் பகுதியில் எரிவாயு குழாய் ஆய்வின் போது குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆள் உயரத்திற்கு மணல் மற்றும் கற்கள் தூக்கி வீசப்பட்டதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் பதிக்கபட்ட குழாய்களை ஆய்வு செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக பதிக்கப்பட்ட குழாய்களில் அதிக அழுத்ததுடன் காற்று செலுத்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட சேரன் மாநகர் … Read more