ரெட்டமங்கலம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்; சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே ரெட்டமங்கலம் அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார். உத்திரமேரூர் அடுத்த ரெட்டமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசினர் ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில், ஒன்றியக்குழு துணை பெருந்தலைவர் வசந்திகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன், சாலவாக்கம் ஒன்றிய துணை செயலாளர் அமுதா தமிழ்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். … Read more