பரமத்திவேலூர் அருக 80 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே 80 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டன. ஜேடர்பாளையத்தில் இருந்த இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு 2010 ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாததால் ஜூலை 11-ந் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. ஒரு வாரத்துக்கு முன்பே அங்கிருந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. Source link