இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு.!

இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த தொழிலாளி உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே கார்ணாம்பூண்டியை சேர்ந்தவர் தொழிலாளி கனகராஜ் (40). இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கனகராஜ் உறவினரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் களஸ்தம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கழிக்குளம் கிராமம் ஏரிக்கரை பகுதி அருகே, சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்ததை கவனிக்காமல் கனகராஜ் நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் கனகராஜை … Read more

''பேருந்து நிறுத்தம் வசதி இல்லா தேர்வு மையம்'' – காலதாமதம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டவர்கள் ஆதங்கம்

திட்டக்குடி: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வெழுத தாமதாமாக வந்தவர்களை தேர்வு மையத்திற்குள் காவலர்கள் அனுமதி மறுத்ததால், மிகவும் ஆதங்கத்தோடு தேர்வெழுத முடியாமல் அங்கிருந்து திரும்பினர். தமிழ்நாடு தேர்வாணையத்தால் நேற்று நடத்தப்பட்டு குரூப்-4 தேர்வு காலை 9.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 12.30 வரை நடைபெறும் எனவும் தேர்வர்கள், தேர்வு மையத்தில் 9 மணிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி தேர்வுக்கு தயரான தேர்வர்களில் சிலர் 9 மணிக்கு பின் அதாவது 9.05 மணிக்கு … Read more

தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி இல்லை – போராட்டம் நடத்திய குரூப் 4 தேர்வர்கள்!

ஓசூரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத தாமதமாக வந்த தேர்வர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்படாததால் அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டனர். தமிழக முழுவதும் டிஎன்பிஎஸ்சி  தேர்வுகள் இன்று காலை 9:30 மணிக்கு துவங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வினை எழுதினர். ஓசூர் பகுதியில் பல்வேறு மையங்கள் அமைக்கப்பட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெற்றது. ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக 5 மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 3,000க்கும் மேற்பட்ட … Read more

மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்தது

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 30 ஆயிரத்து 723 கன அடி நீர் வரத்து சரிந்துள்ள நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்த நிலையில், கர்நாடக மாநில அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் நீர் வரத்து விநாடிக்கு 35 ஆயிரத்து 237 கன … Read more

“என் சாவுக்கு மாமியார்தான் காரணம்” -ஆடியோ அனுப்பிவிட்டு 4 மாத கர்ப்பிணி விபரீத முடிவு

“என் சாவுக்கு மாமியார்தான் காரணம்” என்று வாட்சப்பில் தன் அக்காவிற்கு ஆடியோ அனுப்பிவிட்டு திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் 4 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை வேளச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் 25 வயதான இந்துமதி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் தி.நகரை சேர்ந்த 37 வயதான குமரன் என்பவரை பெற்றோர்கள் ஏற்பாட்டின் பேரில் திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆன நாள் … Read more

நம்பர் ஒன் நடிகை நயன்தாரா இல்லையா? சமந்தா நிகழ்ச்சியில் கிளம்பிய சர்ச்சை

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் நடத்தும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில், நயன்தாரா நம்பர் ஒன் நடிகை என என்னுடையே லிஸ்டில் குறிப்பிடவில்லை என கரண்ஜோஹர் கூறியதால் அவருக்கு எதிராக நயன்தாரா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருவதால் சர்ச்சையாகி உள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் நடத்தும் ‘காபி வித் கரண்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், சமந்தாவுடன் நடிகர் அக்‌ஷய் குமாரும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் புரோமோ … Read more

தேனி ஆர்ப்பாட்டம் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் பதில் சொல்லும் வகையில் இருக்க வேண்டும்: ஆர்பி.உதயகுமார்

மதுரை: தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம், இன்று மதுரையில் எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேனியில் நாளைமறுநாள் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் 25,000 பேரை திரட்ட முடிவு செய்துள்ளனர். மதுரையில் திமுக அரசை கண்டித்து இன்று அதிமுக சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும் நிலையில் தேனியில் நாளை மறு நா 26ம் தேதி நடக்கிறது. தற்போது தேனி மாவட்டச் செயலாளராக இருந்த சையத்கான் ஓ.பன்னீர்செல்வம் அணியில் … Read more

குரூப் 4 தேர்வில் திருமண உதவித் தொகை திட்டம் பற்றிய கேள்வியால் குழப்பம்

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம், உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்ட நிலையில், அது தொடர்பாக குரூப் 4 தேர்வில் கேள்வி கேட்கப்பட்டதால் தேர்வர்கள் குழப்பமடைந்தனர். தமிழகத்தில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் திருமண உதவித் தொகை திட்டம் பற்றிய கேள்வியால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம், உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்ட நிலையில், அது தொடர்பாக குரூப் 4 தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 8-ம் … Read more

மதுரையில் 3 இடங்களில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அணியினர் தொண்டர் பலத்தைக் காட்ட திட்டம்

மதுரை: செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா தலைமையில் மதுரையில் அதிமுகவினர் 3 இடங்களில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆர்ப்பாட்டம் போர்வையில் தொண்டர் பலத்தை காட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மதுரை; மதுரையில் நாளை 3 இடங்களில் வீட்டு வரி முதல் மின்கட்டணம் வரை உயர்த்திய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் போர்வையில் தொண்டர் பலத்தை காட்ட முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்பி.உதயகுமார், முனனாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா … Read more

எங்கள் ஊரில் இப்படியொரு பிரம்மாண்டமான செஸ் போட்டியா? வியப்பில் பூஞ்சேரி கிராம மக்கள்

இத்தனை பிரம்மாண்டமான 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டி தங்கள் ஊரில் நடக்கிறதா என பூஞ்சேரி கிராம மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM