கடலூரில் சக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 4 சிறுவர்கள் கைது!

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில், 15 வயதுடைய சக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நான்கு சிறுவர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் கூற்றுப்படி, அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி, மே 22 அன்று சீனியர் மாணவரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். ஆனால், மாணவி இந்த நிகழ்வைப் பற்றி தனது பெற்றோருக்குத் தெரிவிக்கவில்லை, மாறாக தான் ஒரு நண்பரைப் பார்க்கச் செல்வதாக பொய் சொல்லி, விழாவுக்கு சென்றிருக்கிறாள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது … Read more

#திண்டுக்கல் || சொத்து தகராறில் விவசாயி கொலை.. இருவர் கைது..!

விவசாயி வழக்கில் இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், ஜாதிக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் உத்தப்பன் (55). இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவியும், நாகபாலன் என்ற மகன் மற்றும் முருகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். உத்தப்பனுக்கும் அவரது மனைவியின் உறவினரானகொல்லபட்டியை சேர்ந்த மணி மாலாமுருகன் என்பவருக்கும் இடையில் நிலதகராறு இருந்ததாக கூறப்படுகிறது.  இதனால், அவர் நிலத்தில் விவசாயம் செய்யாமல் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று உத்தபன் தோட்டத்தில் கூலி வேலை செய்து … Read more

கடல் அலையில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் உயிரிழப்பு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த மூன்று சிறுமிகள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த நிலையில் அனைவரும் இன்று காலை கடலில் குளிக்க சென்றனர். அப்போது கடல் சீற்றம் காரணமாக வந்த பெரிய கடல் அலையில் சிக்கி 3 சிறுமிகள் இழுத்துச் செல்லப்பட்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுமிகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மூவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக … Read more

சென்னை விமான நிலைய புதிய வாகன நிறுத்தத்தில் மின்சார வாகன சார்ஜிங் வசதி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய வாகன நிறுத்தத்தில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, வரும் 1ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவிலான இந்த வாகன நிறுத்துமிடத்தில் ஒரே நேரத்தில் 2,000-க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்துவதற்கான வசதி உள்ளது. இதைத் தவிர்த்து பார்வையாளர்களுக்காக வணிக … Read more

லாரியை வழிமறித்து கரும்பை தின்ற காட்டு யானைகள் – போக்குவரத்து பாதிப்பு

மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு எடுத்து சாப்பிட்ட யானைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி சாலையை கடப்பது வழக்கம். அதேபோல் அவ்வழியாக வரும் கரும்பு லாரிகளில் இருந்து வீசப்படும் கரும்புகளை சாப்பிட்டு பழகிய யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றன. இந்நிலையில் ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சவாடி அருகே கரும்புபாரம் ஏற்றிய லாரி வருவதைக் கண்ட யானைகள் … Read more

பொறியியல் கல்லூரிகள் ரேங்கிங்: அண்ணா பல்கலை. செய்தது சரியா?

TNEA counselling: Impacts of Anna University Engineering colleges rank list: பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நிலையில், இப்படி தரவரிசை வெளியிடுவது சரியா? இது மாணவர்களிடையே என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? கல்லூரிகளுக்கு சாதகமா? பாதகமா? என்பது போன்ற விஷயங்களை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதற்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அதன் கீழ் உள்ள பொறியியல் … Read more

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!

4 நாட்களுக்கு சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளித்திருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.தரைமட்டத்தில் இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு  தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.  இங்கு ஒவ்வொரு மாதமும் பிரதோ‌ஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதன் படி, ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் … Read more

அரசியலில் ஓபிஎஸ் உடன் பயணித்ததற்கு வெட்கப்படுகிறேன் – கே.பி.முனுசாமி

அரசியலில் ஓபிஎஸ் உடன் இணைந்து பணியாற்றியதற்கு தாம் வெட்கப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும் அதிமுக மூத்த நிர்வாகி கே பி முனுசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவுடன் இணைந்து ஓபிஎஸ் செயல்படுவது போன்ற சூழல் வந்ததால் தான் அவரை விட்டு தாம் விலகியதாக கூறினார். இதனிடையே, ஓபிஎஸ்-ன் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலிருந்து இன்று மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை … Read more

சென்னையில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை நடத்தினர். சீன நாட்டைச் சேர்ந்தவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கப் பதிவு செயய்ப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் டெல்லியிலிருந்து சென்னை வந்த சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தின் … Read more

நகைகளை கழற்றி வைத்துவிட்டு தூங்கிய தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தொழிலதிபரின் வீடு புகுந்து 65 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை திருச்செந்தூர் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்செந்தூரில் கீழ வெயிலுகந்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் முருகேசன் – கலாவதி தம்பதியர் இவரது மகன் பாலகுமார் என்பவர் திருச்செந்தூரில் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், தொழிலதிபர் பாலகுமார் தனது வீட்டின் மாடியில் தூங்கும்போது தான் அணிந்திருந்த 20 பவுன் தங்க நகையை கழற்றி அலமாரியிலுள்ள லாக்கரில் வைத்துவிட்டு தூக்குவது வழக்கம், அதேபோல் … Read more