தீபாவளிக்கு முன்கூட்டியே பட்டாசு விற்க உரிமம் வழங்க வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பட்டாசு விற்பனை உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு வழங்க சாத்தியம் இருந்தாலும், தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கான உரிமமும், இதர மாவட்டங்களில் ஓராண்டுக்கான உரிமமும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உரிம அனுமதிக்கு மார்ச் மாதத்திலேயே விண்ணப்பித்தாலும், விற்பனைக்கான உரிமம் தீபாவளிபண்டிகைக்கு சில தினங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டு வருகிறது. இது பட்டாசு வணிகர்களை பெருமளவு பாதிப்பதுடன், விற்பனைக்கான முன்னேற்பாடுகளை செய்வது, பாதுகாப்பாக விற்பனை செய்வது … Read more

பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு? அமைச்சர்களுக்கு சிக்கல்!

பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அமைச்சர்கள் , சக்கரபாணி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தரமற்ற பொருட்கள் விநோயோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை … Read more

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 40,000 கனஅடி நீர் வெளியேற்றம்; மேலும் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

“அவர் ஒருமையில் பேசவில்லை, உரிமையில் தான் அப்படி பேசினார்” – மேயர் பிரியாவின் விளக்கம்

Chennai Tamil News: தலைமை செயலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்  சந்திப்பில் அமைச்சர் கே.என்.நேரு மேயர் பிரியாவை கடுமையாக பேசினார் என சர்ச்சை வெளியானது. அதற்கு மேயர் பிரியா பதிலளித்துள்ளதாவது: “மாண்புமிகு அமைச்சர் ஒருங்கிணைத்த செய்தியாளர் சந்திப்பில், கார்பரேஷன் பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதை கூறினோம். எப்போதும் செய்தியாளர்கள் சந்திப்பில் எடுத்துரைக்கும் அவர், அன்று என்னை பேச சொன்னார். அதை நான் உறுதி செய்துகொள்ள மீண்டும் கேட்டேன்.  அது இயல்பான உரையாடல் மட்டுமே, அவர் என்னிடம் கடுமையாக … Read more

ஆறுக்குட்டி போல பல குட்டிகள் திமுகவுக்கு வர தயாராக உள்ளனர் – திமுக எம்.பி.ஆர்.எஸ். பாரதி.!

திமுக தொடர்ந்து வெற்றிபெற்று வருவதை தாங்க முடியாமல் பழனிசாமி பொய் குற்றச்சாட்டு கூறி வருகிறார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அளித்த பிரமாண்ட வரவேற்பை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. திமுகவுக்கும் முதலமைச்சருக்கும் மக்கள் அளித்து வரும் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர் பேசி வருகிறார் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆறுக்குட்டி போல பல குட்டிகள் அதிமுகவில் இருந்து … Read more

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி: பல்வேறு துறை அலுவலர்களை ஈடுபடுத்த சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: சென்னை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையில் ஆதார் எண்களை இணைக்கும் பணியில் பல்வேறு துறை அலுவலர்களை ஈடுபடுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காக, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த ஆக.1-ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்இணைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர்ககன்தீப் சிங் பேடி தலைமையில்,நேற்று நடைபெற்றது. … Read more

தஞ்சாவூர் அருகே சோகம் தாய் தற்கொலை செய்ததால் மகனும் தூக்கில் தொங்கினார்

பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த திருப்பாலைத்துறையை சேர்ந்தவர் வசந்தா (52). இவரது கணவர் ஜெகதீசன் இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்கள். வசந்தா நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாகாமல் வேதனையில் இருந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் திடீரென அவரை காணவில்லை. அவரது 2வது மகன் அன்பரசன் (28) பல்வேறு இடங்களில் தேடியும் தாய் கிடைக்கவில்லை. நேற்று 2வது நாளாக தாயை தேடி அன்பரசன் சென்றார். அப்போது குடமுருட்டி … Read more

போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் சுற்றித் திரிந்த காங்கிரஸ் நிர்வாகி – காரணம் என்ன?

திண்டுக்கல்லில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் காங்கிரஸ் நிர்வாகி சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் பஸ் நிலையம் பகுதியில் ஒருவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து மிடுக்கான தோற்றத்தில் மோட்டார் சைக்கிளில் (புல்லட்) சுற்றி வந்தார். அதனை பார்த்த பொதுமக்கள் பலரும் அவர், திண்டுக்கல்லுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரோ?, என்று நினைத்து அவரை அச்சத்துடன் பார்த்து கடந்து சென்றனர். இதற்கிடையே போலீஸ் சீருடையில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் சுற்றித்திரிகிறார். அவருடைய சீருடை போலி போலீசாரின் சீருடை … Read more