ஈரோடு,பெருந்துறை சாலையில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை..

ஈரோடு: ஈரோடு குமலன்குட்டை, பழையபாளையம், பெருந்துறை சாலையில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். உணவகம் ஒன்றில் நடத்திய சோதனையில் கெட்டுப்போன இறைச்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். 

என்ன குற்றம் செய்தார்கள்? கனியாமூர் பள்ளி மாணவியின் மரண வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி

கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் ஆஜாரக உத்தரவிட நேரிடும் என்று சிபிசிஐடி-யை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரைச் சேர்ந்த மாணவி, கடந்த மாதம் 13ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் … Read more

தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த திமுக எம்.எல்.ஏ வீட்டு மொய் விருந்து, கருப்பு பணத்தை மாற்றும் முயற்சியா.?!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நடத்திய பேரனின் காதுகுத்து மற்றும் மொய் விருந்தில் 100 ஆடுகள் வெட்டப்பட்டு சுமார் 8000 நபர்களுக்கு விருந்து வைக்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் நா.அசோக் குமார் 8000 நபர்களுக்கு மொய் விருந்து ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் 100 கிடா, 1300 கிலோ கறி வெட்டி விருந்து சமைக்கப்பட்டது.  மேலும், சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்களுக்கு பாயாசம், வடை, … Read more

இபிஎஸ் குணாதிசயங்களைத்தான் கண்டிக்கிறேன்; அவருடன் விரோதம் இல்லை: டிடிவி தினகரன்

தஞ்சாவூர்: “அனைவரும் இணக்கமாக செயல்பட்டால்தான், தீய சக்தியான திமுகவை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்ற முடியும், என்ற உயரிய நோக்கத்தோடு ஓபிஎஸ், வைத்திலிங்கம் கூறியுள்ள கருத்தை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் அதிமுகவில் உள்ள சில துரோகிகள், துரோக சிந்தனை உள்ளவர்கள் திருந்தினால்தான், இவர்களது எண்ணங்கள் நிறைவேறும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” பன்னீர்செல்வம், … Read more

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் தாயார் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது … Read more

கனியாமூர் மாணவி வழக்கு: கைதுகளுக்கான காரணம் என்ன? மெட்ராஸ் உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர்  கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜாரக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பாக, அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, … Read more

லட்சக்கணக்கானோருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை செய்வதே திமுக அரசின் சாதனை: அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

கோவை: லட்சக்கணக்கானோருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை செய்வதே திமுக அரசின் சாதனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் கோவையில் ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.271 கோடி மதிப்பில் 228 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 15 மாதங்களில் … Read more

வேதாரண்யம்: தொடர் மழை எதிரொலி – உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம் பகுதியில் பெய்த மழையால் உப்பளத்தில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் மூவாயிரம் ஏக்கரில் மட்டும் சாப்பாட்டு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெப்பம் நிலவியதால் உப்பு உற்பத்தி தடையின்றி நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த இரண்டு தினங்களாக இரவில் மட்டும் தொடர்ந்து பெய்த மழையால் … Read more

சோனாலி போகத்’ 42 வயதில் மரணம்: இந்தியர்கள் மாரடைப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளவர்களா?

பாஜக தலைவர், டிக்டாக் நட்சத்திரம், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர், நடிகையுமான சோனாலி போகத்’ தனது 42வது வயதில் கோவாவில் மாரடைப்பால் காலமானார். போகத் தனது ஊழியர்கள் சிலருடன் கோவாவிற்கு சென்றிருந்தார். அங்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து போகத், அஞ்சுனாவில் உள்ள செயின்ட் அந்தோணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். சமீபத்தில், நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு … Read more

உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்தை முதல்வர் எப்போதும் போல கடந்து செல்வாரா?- ஆர்.பி.உதயகுமார் கேள்வி 

சென்னை: உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்தை முதல்வர் எப்போதும் போல கடந்து செல்வாரா? அல்லது கவனத்தில் கொண்டு செயல்படுவாரா என அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழக நிதி அமைச்சர் கருத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது, இது ஒரு விவாதப் பொருளாக மாறி உள்ளது. தலைமை நீதிபதி மக்கள் மீது அக்கறை கொண்டதின் காரணமாக, பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். பிரதமர் நாட்டை வல்லரசு ஆக்க கடுமையாக … Read more