தவறான செய்திகள் பரப்புவதை நிறுத்துங்கள் – நடிகை மீனா வேண்டுகோள்

தனது கணவரின் மரணம் குறித்து தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று நடிகை மீனா கேட்டுக்கொண்டுள்ளார். 90-களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த மீனா முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது தமிழில் போதிய அளவு வாய்ப்பில்லை என்றாலும் மலையாளம் தெலுங்கில் மீனா பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 2 மலையாளம் மற்றும் த்ரிஷ்யம் 2 தெலுங்கு ஆகிய 2 படங்களும் … Read more

மகனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் இறுதி சடங்கில் மயங்கி விழுந்த தந்தை.. சோகத்தில் குடும்பத்தினர்.!

மகனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் இறுதி சடங்கில் தந்தை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கீரைத்துறை ஆதிமூலம் பிள்ளை சந்து பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சிவ ஆனந்தமணி தனியார் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவ ஆனந்தமணி திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.  உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் … Read more

அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை.. தனித்தனியே நகைகளை பிரித்து வைத்ததால் 32 சவரன் தப்பியது..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெண் ஒருவர் தனது வீட்டில் நகைகளை ஒரே இடத்தில் வைக்காமல், தனித்தனியே பிரித்து வைத்ததால் கொள்ளையர்களிடம் இருந்து 32 சவரன் தப்பியுள்ளது. குளத்தூரை சேர்ந்த அரசு ஊழியரான வள்ளிவேல் என்பவர், தனது வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தில், 40 சவரன் நகைகள், 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகாரளித்தார். இது குறித்து அவரது மனைவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நகைகளை அவர் வீட்டில் பல இடங்களிலும் மறைத்து … Read more

கூட்டுறவுத் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.780 கோடி மதிப்பில் முறைகேடு: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் 

திண்டுக்கல்: கூட்டுறவுத் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் தோராயமாக ரூ.780 கோடி மதிப்பிலான முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கி மாணவர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே கூட்டுறவுத்துறை சார்பில் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்குவதும் தொடங்கியுள்ளது. மாணவர் சேர்க்கையை தொடங்க விண்ணப்பங்கள் … Read more

காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! – நீதிமன்றம்

தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்ப இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,”கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. … Read more

அன்று பகை… இன்று பாசம்… அண்ணன் படத்துக்கு வாழ்த்து சொன்ன வனிதா

தனது குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இல்லை என்றாலும் தனது அண்ணன் அருண் விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள யானை படத்திற்கு வனிதா விஜயகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் 90 களில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த வனிதா விஜயகுமார் திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில், தற்போது விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் ரீ- எண்ட்ரி கொடுத்துள்ளார். இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரிய வரவேற்பை அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சி, … Read more

"அவன் தான் முக்கியம்." கள்ளக்காதலை கைவிடாத மனைவிக்கு நேர்ந்த கொடுமை.!

மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் தொழிலாளியான கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகாம்பாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார்.  இந்நிலையில் முருகாம்பாளுக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துராமன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த கிருஷ்ணன் முருகாம்பாளிடம் கள்ள காதலை கைவிடும் படி கூறியுள்ளார். ஆனால் முருகம்பாள் நான் கள்ள காதலை கைவிட … Read more

அரசுப்பள்ளிகளில் புதிதாக 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்..

நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் புதிதாக 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துக்கொண்டார். அப்போது 350 மாணவர்களுக்கு தலா 3000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. Source link

மாற்றுதிறனாளிகளுக்கு உரிய வசதிகள் – சென்னையில் வலம் வரவுள்ள இ-பஸ்களின் சிறப்பு அம்சங்கள்

தமிழகத்தில் முதல் கட்டமாக, சென்னையில் மின்சாரப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கே.எப்.டபிள்யூ வங்கி நிதி உதவியின் கீழ் சென்னையில் மொத்தம் 500 மின்சாரப் பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 500 பேருந்துகளையும் 2024-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இ-பஸ்களின் முக்கிய அம்சங்கள்: > இந்த மின்சார பேருந்துகள் அனைத்தும் 3300 மிமீ அகலமும், 12 ஆயிரம் மிமீ உயரமும் இருக்கும். > இந்தப் பேருந்தின் ஆயுள் காலம் … Read more

தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!

தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். தேனியில் வசித்த எஸ்கே.அய்யாசாமி – ஏ.ரத்தினம்மாள் தம்பதியரின் மகன் ராஜன் என்ற சேர்மராஜன். வணிகர் குடும்பத்தில் பிறந்த இவர் தனது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி ஆவார், பத்தாம் வகுப்பு வரை ஓடைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர், தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பை முடித்தார். பின்னர், உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் … Read more