உதயநிதி ஸ்டாலின் அவ்வளவு கூறியும் மீண்டும் விருப்பம் தெரிவித்த திமுக எம்.எல்.ஏ
“கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினரும், இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பங்கேற்க வேண்டும்” என்றும், மக்களின் விருப்பத்தை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் எனவும் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் விருப்பம் தெரிவித்துள்ள சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பச்சேரியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மதியரசன் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர் முருகன் ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது ஆண்டு பிறந்த நாள் விழா … Read more