சீரியல்னா அப்படி… நிஜத்தில் நாங்க இப்படி… ரோஜா நட்சத்திரங்களின் அரிய புகைப்படங்கள்

Tamil Photo Gallery Of Tamil Serial Roja Team : தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று ரோஜா. சுப்பு சூரியன், பிரியங்கா நல்காரி, ராஜேஷ், வடிவுகரசி, டாக்டர் ஷர்மிளா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தினசரி எபிசோடுகள் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி வருவதால், டிஆர்பி ரேட்டிங்கிலும் ரோஜா சீரியலுக்கு நல்ல ரேட்டிங் கிடைத்து வருகிறது. சீரியலின் பரபரப்பான எபிசோடுகளுக்கு மட்டுமல்லாது முக்கிய … Read more

திண்டுக்கல்லில் உள்ள தனியார் வேளாண் கல்லூரி விடுதியில் பசியால் மயங்கி விழுந்த 13 மாணவ, மாணவிகள்.!

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே சேனாங்கோட்டையில் உள்ள தனியார் வேளாண் கல்லூரி விடுதியில் பசியால் 13 மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்தது தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தினார். மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று  ஆர்.டி.ஓ சிவக்குமார் இன்று விசாரித்தார். அப்போது விடுதி கேண்டீனில் தினமும் காலை 9.30 மணிக்கே காலை உணவு வழங்கப்படுவதாகவும், ஆனால் 7 மணிக்கே வகுப்புகள் தொடங்கப்படுவதாகவும் மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முறையாக விசாரணை நடத்தப்பட்டு, தவறு நடந்திருக்கும் … Read more

நூபுர் சர்மா கைதாக வாய்ப்பு: முகமது நபி விமர்சன வழக்கில் விசாரிக்க டெல்லி வந்தது மும்பை போலீஸ்

புதுடெல்லி: இஸ்லாமிய இறைத்தூதர் முகமது நபிகளை தவறாக விமர்சனம் செய்த பாஜக செய்தித்தொடர்பாளர் நூபுர் சர்மா கைதாகும் சூழல் உருவாகி உள்ளது. இவரை நேரில் விசாரிக்க மும்பை போலீஸார் டெல்லிக்கு வந்துள்ளனர். கடந்த மே 26-ல் இந்தி தொலைக்காட்சி சேனல்களில் வழக்கம்போல் பாஜக செய்தித் தொடர்பாளரான நூபுர் சர்மா கலந்து கொண்டார். ஆனால், அன்றைய தினம் அவர் இஸ்லாமியர்களின் இறைத்தூதரான முகமது நபியை தவறாக விமர்சனம் செய்திருந்தார். இதனால், முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அளவில் இந்தியாவிற்கு … Read more

முழுவதும் உரிந்த தோல்.. அரிய வகை நோய் பாதித்த நபரை குணப்படுத்திய கோவை அரசு மருத்துவர்கள்!

கோவையில் உடல் முழுவதும் தோல் உரிந்த நிலையில் வந்த நபரை கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் குணப்படுத்தி அசத்தியுள்ளனர். கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் தோல் முழுவதும் உரிந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை எரிசனம்பட்டியை சேர்ந்த முருகவேல் (35), என்பவர் அனுமதிக்கப்பட்டு 45 நாட்கள் கழித்து தற்போது முழுவதும் குணமாகி வீடு திரும்புகிறார். இது குறித்து கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறும் போது:-இந்த நோயின் பெயர் டாக்சிக் … Read more

திருச்சியின் இதயப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன்;18) மின் விநியோகம் துண்டிப்பு!

திருச்சி மாநகரின் முக்கியமான பகுதிகளில், பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூம்;18) மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : திருச்சி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன்: 18) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறப்படும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய பஸ் நிலையம், வ.உ.சி. ரோடு, கலெக்டர் அலுவலக ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, … Read more

ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கிடந்த இளைஞர் சடலம்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!

குடிபோதையில் ஏற்பட்ட் தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ராயப்பேட்டை காசிம் தெருவை சேர்ந்தவர் தேவி. இவரது மகன் தாவித்ராஜ் கடந்த 14ம் தேதி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தின் தெற்கு நுழைவு வாயில் அருகே மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து தேவி தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் … Read more

தண்டவாள விரிசல் | சிவப்புக் கொடியுடன் 200 மீட்டர் ஓடி சென்னை – ராமேசுவரம் ரயிலை நிறுத்திய ஊழியர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை கண்டறிந்த கீ மேன் 200 மீட்டர் தூரம் ஓடிச்சென்று சிவப்பு கொடியைக் காட்டி, ரயிலை நிறுத்தியதால் சென்னை-ராமேசுவரம் விரைவு ரயில் விபத்திலிருந்து தப்பியது. ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாலாந்தரவை ரயில்நிலையம் அருகே ரயில்வே ஊழியர் (கீ மேன்) வீரப்பெருமாள்(35) தண்டவாளங்களை சரி செய்யும் பணியில் இன்று காலை ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வாலாந்தரவை ரயில் நிலைய நடைமேடையின் மேற்குப்பகுதியில் … Read more

இதுதான் வீக் எண்ட் வைப்ஸ்! ரம்யா பாண்டியன் வீடியோ!

நடிகை ரம்யா பாண்டியன் பல்வேறு போட்டோஷூட்கள் மூலம் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார். ஜோக்கர் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன், தனது புடவை போட்டோஷூட்கள் மூலம் சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்தார். அதில் கிடைத்த வரவேற்பால் விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று, ஃபைனல்ஸ் வரை வந்தார். பிறகு, கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற … Read more

எல்லை மீறிய கிண்டல் பேச்சு.. நண்பரை கொலை செய்த இரும்பு கடைகாரர்..!

உணவகத்தில் கிண்டல் செய்ததால் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நல்லவடியை சேர்ந்தவர் முத்து. இவர் அந்த பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இவர் அவரது நண்பர் செல்வகுமார் என்பவருடன் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது, இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். சம்பவதன்று, செல்வகுமார் மது அருந்திவிட்டு உணவகத்தில் பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்து அவரிடம் உன் மனைவி பிரிந்து 10 … Read more

சாதித் தீயை அணைக்காமல் ஊதிக்கொண்டிருந்தால் எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும்: மநீம

சென்னை: “இன்னமும் சாதி என்னும் தீயை அணைக்காமல், ஊதிக்கொண்டே இருந்தால், எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும்” என்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் இன்று ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரிடம் உதவி தலைமை ஆசிரியை சாதி ரீதியாகப் பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சாதிப்பற்று கூடாது என்று மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே, சாதி வெறியைத் தூண்டுவதுபோல … Read more