வெற்றிகளும் புகழ்மாலைகளும் மென்மேலும் குவியட்டும்! தமிழன் பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து

நார்வே நாட்டின் குரூப் ஏ ஓபன் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நார்வே நாட்டில் நடந்த குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.  சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “சில … Read more

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கு.. மேலும் அவகாசம் கோரியதற்கு நீதிபதிகள் கண்டனம்

சென்னை பிராட்வே பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் தலைமை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்றிடம் வழங்க அவகாசம் வழங்கியும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மாற்றிடம் வழங்க சென்னை மாநகராட்சி தரப்பில் மேலும் அவகாசம் கோரப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஜூன் 23ஆம் தேதிக்குள் மாற்றிடம் … Read more

கரோனா பாதிப்பு | அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை – இன்று ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்

புதுடெல்லி/சென்னை: நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், தமிழகத்தில் கரோனா தாக்கத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடை பெற்றது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி கரோனா பாதிப்பு 108 நாட்களுக்குப் பிறகு 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 4,32,13,435-ஆக உயர்ந்துள்ளது. கடந்த … Read more

குடும்ப தகராறில் கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு.. தென்காசி அருகே நிகழ்ந்த அவலம்..!

கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம், கரையாளனூர் நடுத்தெருவைச சேர்ந்தவா் முருகன்.  இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவியும் 2 வயதில் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், ராஜேஸ்வரி ஐந்துமாத கர்ப்பிணியாக உள்ளார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் … Read more

கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்த நிதி நிறுவன உரிமையாளர் கைது

சேலத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தாக நிதி நிறுவன உரிமையாளர் கைதாகி உள்ளார். கே.பி. கரடை சேர்ந்த ஜவ்வரிசி வியாபாரி காளியப்பன் நெத்திமேட்டில் உள்ள ராஜவேல் பாபு என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் 2021-ம் ஆண்டில் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். பின்னர் மாதம் 26 ஆயிரம் ரூபாய் வீதம் 10 தவணைகளில் அவர் அந்த தொகையை திருப்பி செலுத்தியுள்ளார். இந்நிலையில் மேலும் 1 லட்சம் ரூபாய் கேட்டு கடந்த 9-ம் தேதி ராஜவேல் … Read more

பொதுமக்களின் போக்குவரத்தாக மாறிவரும் சென்னை மெட்ரோ – ஒரு பின்புலப் பார்வை

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால், ஓர் இடத்தில் மட்டும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. விளையாடச் செல்பவர்கள் தொடங்கி பணிக்குச் செல்பவர்கள் வரை அனைவரும் அங்கு இருந்தனர். மற்றொரு நாள் இரவு 7 மணி. சென்னையில் முக்கிய இடத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். அந்த வரிசையில் நின்று நானும் அதை வாங்கிக் கொண்டு, அந்த இடத்திற்குச் சென்றேன். இந்த இரண்டு காட்சிகளும் நான் சென்னை … Read more

திருமணமான ஏழே மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை..!

திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் 4-வது வார்டு மூனுசாமி கோவில்தெருவை சேர்ந்தவர்  ரவிகுமார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அர்ச்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அர்ச்சனாவிற்கு உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது.  அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ரவிக்குமார் அழைத்து சென்றார். ஆனால், அவரை ரவிக்குமார் வீட்டிற்கு அழைத்து வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அர்ச்சனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து … Read more

பள்ளிப் பெருந்து ஓட்டுநர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: ஓசூர் கோட்டாட்சியர்

ஓசூர்: பள்ளிப் பேருந்து ஓட்டுனர்கள் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் குழந்தைகளின் குடும்பங்களை கவனத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று ஓசூர் கோட்டாட்சியர் தேன்மொழி வலியுறுத்தியுள்ளார். ஓசூர் வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளுக்கான சிறப்பு ஆண்டு ஆய்வுப்பணி கோட்டாட்சியர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ஓசூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் முன்னிலை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி வரவேற்புரை … Read more

அதெல்லாம் வேணாம், இதை நேரடியா முடிச்சு விடுங்க முதல்வரே..  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டிவிட்.!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு ஆய்வுக் குழு அமைப்பதை விட்டுவிட்டு, அவரச சட்டத்தை இயற்றி ஆன்லைன் ரம்மியை தடை செய்து மக்களை காக்க வேண்டும் என, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டு உள்ளிட்ட சூதாட்டங்கள் குறித்து, அவசர தடை சட்டம் தொடர்பான பரிந்துரைகளை அளிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், இதுபோல் ஆய்வுக் குழு … Read more

கூட்டுறவு வங்கிகளில் போலியாக கணக்கு தொடங்கி மோசடி.. திமுக MP எச்சரிக்கை

கடந்த அதிமுக ஆட்சியில் நாமக்கல் ஆரியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் அதிமுக பிரமுகர் முறைகேடாக கடன் பெற்று மோசடி செய்ததாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். நாமக்கலில் பேட்டியளித்த அவர், ஆரியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவரான மணி என்பவர், தனது சகோதரர் பெயரில் கடன் பெற்று மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருக்கும் சகோதரர் சுப்ரமணி என்பவர் பெயரில் போலி கையெழுத்திட்டு கணக்கு தொடங்கி ஒரு லட்சத்து … Read more