கட்டுமானப் பணியில் அதிக வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்,தமிழக தொழிலாளர்கள் ஈடுபடுபட்டால் பொருளாதாரம் மேம்படும் – அமைச்சர்

தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளில் அதிகளவில் வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுவதாகவும், அப்பணிகளில் தமிழர்களை ஈடுபடுத்தினால் தான் மாநிலத்தின் பொருளாதாரம் மேம்படும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாநாட்டில் பேசிய அவர், தமிழகத்திற்கு கிடைத்த அந்நிய முதலீட்டில் 50% தொகை கட்டுமானத்திற்கு பயன்படுவடுவதாக கூறினார். Source link

உட்புற சாலைகளில் இயந்திரங்கள் மூலம் தூய்மைப் பணி : சென்னை மாநகராட்சி உத்தரவு 

சென்னை: உட்புற சாலைகளில் இயந்திரங்கள் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ள அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் பேருந்து சாலைகளில் இரவு நேரங்களில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலையோரங்கள் மற்றும் மையத்தடுப்பு ஓரங்களில் மெல்லிய மணல் மற்றும் தூசிகள் படிந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், நாளடைவில் சாலைகளில் உள்ள மழைநீர் … Read more

திருவள்ளுவர் உருவத்தில் நெல் நடவு செய்து அசத்திய கும்பகோணம் விவசாயி இளங்கோவன்!

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், கும்பகோணம் அருகே விவசாயி இளங்கோவன் என்பவர் தனது வயலில் திருவள்ளுவர் உருவத்தில் நெல் நடவு செய்து அசத்தியுள்ளார் கும்பகோணம் வட்டம், மலையப்பநல்லூரில் உலகின் முதன்முதலாக இயற்கை விவசாயம் பாரம்பரிய நெல்லுக்கு மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வயல் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் உழவுக்கென்று தனி அதிகாரம் கொடுத்து உழவு தொழிலின் சிறப்பை உணர்த்திய திருவள்ளுவரின் உருவ நடவு வயலை இயற்கை விவசாயி இளங்கோவன் என்பவர் உருவாக்கி உள்ளார். நேபாளில் உள்ள … Read more

நீட் தேர்வு ஹால் டிக்கெட்: டவுன்லோட் செய்வது எப்படி?

NEET exam UG 2022 How to download Hall ticket?: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இவற்றில் இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக … Read more

#ராணிப்பேட்டை : கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி 'ரவுடி சரத் 'படுகொலை செய்த மர்ம கும்பல்.!

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியை சோ்ந்த அசோக்குமாரின் மகன் சரத்குமாா். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இன்று காலை புதூர் மலைமேடு கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே கொலை செய்யப்பட்டு கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டபட்ட நிலையில்  பிணமாக கிடந்துள்ளார்.  இது தொடர்பாக அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, சரத்குமாரின் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு … Read more

நாளை அதிமுக பொதுக்குழு – இ.பி.எஸ்,ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை.!

சென்னை வானகரத்தில் நாளை அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அதேபோல், பன்னீர்செல்வமும் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே, நாளை காலை 9.15 மணிக்கு பொதுக்குழு கூடும் நிலையில், காலை 9 மணிக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகிறது. Source … Read more

வானிலை முன்னறிவிப்பு: கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் கோவை மற்றும் நீலகரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு … Read more

தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. … Read more