திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலை வைப்பதற்கான தடை நீங்கியது..

திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் குறிப்பிட்ட நிலத்துக்கான பட்டா சட்டவிரோதமாக பெறப்பட்டுள்ளதால் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, பட்டாவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்படவில்லை என்றும் பட்டா நிலத்தில் சிலை அமைப்பதை ஆக்கிரமிப்பு என கூற முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து, பட்டாவை எதிர்த்து வழக்கு … Read more

“காதலில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை… கும்பகோணம் கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்” – மநீம

சென்னை: “வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச் சொன்ன பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் … Read more

ஆடு திருட முயன்றவரை ரத்தம் வர காலால் எட்டி உதைத்த சிறப்பு உதவி ஆய்வாளர்!

சத்தியமங்கலம் அருகே ஆடு திருட முயன்ற நபரை பொதுமக்கள் முன்னிலையில் அவரை தாக்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காவிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி நாகராஜ். இவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளாடுகளை, கடந்த ஜூன் இரண்டாம் தேதி திருப்பூர் மாவட்டம் கொட்டகாட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து ஆடுகளை திருட முயன்றனர். அங்கிருந்த மக்கள் அந்த கும்பலைச் சேர்ந்த, குமார் என்பவரை பிடித்து … Read more

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; 52 பணியிடங்கள்; டிகிரி, பி.இ, பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Anna University recruitment 2022 invites application for various posts: அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட மேலாளர், இளநிலை மென்பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 52 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.06.2022 Project Manager காலியிடங்களின் எண்ணிக்கை – 1 கல்வித் தகுதி : B.E/B. Tech/MCA/M. Tech/M.E/MS in Computer Science/Information Technology. மேலும் 3-4 வருட பணி அனுபவம் அவசியம். … Read more

#விழுப்புரம்.! குடிபோதையில் தகராறு செய்த கணவனின் முகத்தில் சூடான ரசத்தை ஊற்றிய மனைவி.!

விழுப்புரம் மாவட்டத்தில் குடிபோதையில் தகராறு செய்த கணவனின் முகத்தில் மனைவி சூடான ரசத்தை ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி குப்பம்மாள். நடராஜன் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி குப்பம்மாளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் இந்த சம்பவம் குறித்து குப்பம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குப்பம்மாள் அளித்த புகாரின்பேரில் போலீசார் இரண்டு முறை நடராஜனை எச்சரித்து அனுப்பி உள்ளனர். இதையடுத்து நேற்று … Read more

ஒற்றைத் தலைமை தேவை என நிர்வாகிகள் வலியுறுத்தல்.. யார் அந்த ஒற்றை தலைமை..? ஜெயகுமார் பேட்டி

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது. பின்னர் பேட்டியளித்த ஜெயக்குமார், கட்சியின் வளர்ச்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என பெரும்பாலான நிர்வாகிகள் தெரிவித்ததாகவும், யார் தலைமை என்பது … Read more

அதிமுக கூட்டத்தில் ‘ஒற்றைத் தலைமை’ குறித்து விவாதிக்கப்பட்டது: ஜெயக்குமார் தகவல்

சென்னை: “ஒற்றைத் தலைமை குறித்தும் இன்று விவாதிக்கப்பட்டது. அந்த விவாதம் ஓர் ஆரோக்கியமான முறையில் இருந்தது. இதுதொடர்பாக பெரும்பான்மையான தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என்பதை வலியுறுத்திக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். வரும் ஜூன் 23-ம் தேதியன்று நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி … Read more

மதுரை: நோயாளியை ஸ்டெச்சரில் அழைத்துச் செல்ல லஞ்சம் – கள ஆய்வில் சிக்கிய ஊழியர்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளை ஸ்டெச்சரில் அழைத்துச் செல்ல மருத்துவமனை ஊழியர் லஞ்சம் வாங்குவது புதிய தலைமுறை கள ஆய்வில் தெரியவந்துள்ளது. தென் மாவட்ட மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் 4 ஆயிரம் உள் நோயாளிகளும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளை உள் நோயாளிகளாக அனுமதிக்க ஸ்டெச்சரில் அழைத்துச் செல்லும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் … Read more

காலில் விழுந்தும் கரையாத ராதிகா… விரக்தியில் ராஜேஷை பின்னி எடுத்த கோபி

Tamilகாவி Serial Baakiyalakshmi Rating Update : ராதிகா இப்படியே இருந்தா சீரியலுக்கு நல்லது சீரியல் பாக்குர ஆடியஸ்க்கும் நல்லது ஆனால் ராதிகா பாக்யாவுக்கு வில்லியா மாறுனா இப்படி டிஆர்பி வீழ்ச்சிதான் பாத்துக்கோங்க டைரக்டரே என்று சொல்ல வைக்கிறது பாக்யலட்சுமி சீரியல். விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. குடும்ப கதையாக இருந்தாலும் தொடக்கத்தில் சரியான வரவேற்பு இல்லாத இந்த சீரியலில். இன்று நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்சினைகளை ஆங்காங்கே திரைக்கதையாக வைத்து கவனம் ஈர்த்ததை … Read more

10% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதில் மகிழ்ச்சி: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்.!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 10% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அளிப்பதாக, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி பயோடெக்னாலஜி படிப்புக்கு  அறிவிக்கப்பட்டிருந்த  உயர்வகுப்பு  ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு  ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகம் அதன் தவறை திருத்திக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! காமராசர் பல்கலைக்கழகத்தின் சமூக அநீதியை பாட்டாளி மக்கள் கட்சி தான் அம்பலப்படுத்தியது.  எம்.எஸ்சி பயோடெக்னாலஜி படிப்புக்கு மத்திய … Read more